தமிழ் சோகக் கவிதைகள் (Tamil Sad Quotes) என்பது மனதில் துயரத்தை, வலியை, விரக்தியை வெளிப்படுத்தும் இலக்கிய வடிவமாகும். இவை பெரும்பாலும் பிரிவு, துன்பம், காதலில் தோல்வி, அல்லது வாழ்க்கையின் சோகம் போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு எழுதப்படுகின்றன. தமிழின் வரலாற்றில் சோகக் கவிதைகளுக்கு முக்கிய இடம் உண்டு, மேலும் புலவர்கள் தங்கள் உணர்வுகளை தத்ரூபமாகப் படைக்க இத்தகைய கவிதைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
சோகக் கவிதைகள், மொழியின் அழகை துயரத்தின் வழியாக வெளிப்படுத்தி, மனதில் தோன்றும் உணர்வுகளை நன்கு பிரதிபலிக்கின்றன. இதனால், உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதோடு, அவற்றை செதுக்கி, கலைரீதியாகவும் தந்து, வாசகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழ் சோகக் கவிதைகள், தனிப்பட்ட சோகத்தையும் சமூகத்தில் உள்ள வலிகளையும் பிரதிபலித்து, வாசகர்களுக்கு ஒரு மௌனமான ஆறுதலை அளிக்கின்றன.
சோகக் கவிதைகள்
யார் முதலில் பேசுவது என்ற தலைக்கனத்தில்
பலர் பேசாமலே பிரிந்து விடுகின்றனர்.
ஏமாற்றங்கள் பழகிப்போகிறதே தவிர
எதுவும் மறந்து போவதில்லை.
பார்க்கும் உறவுகள் எல்லாமே
உன் சொந்தம் இல்லை
பழகி பார் பாதி வேஷம் தான்
அளவோடு இருந்திருக்கலாமோ என்பது
அடிபட்டு மிதிப்பட்டு
அவமானப்பட்ட பின் தான்
புரிகின்றது.
என்னை தொல்லையென நினைக்காமல்
இனி இல்லையென நினைத்துக்கொள்
விதைத்தது அன்பென்றாலும்
விளைவது கண்ணீர் துளிகளே
சிரித்த நிமிடங்களை விட
அழுத நிமிடங்களே
என்றும் மனதை விட்டு
நீங்குவதில்லை.
எதை எதையோ விரும்பிய இதயம்
இன்று எதையும் விரும்பாமல் இருக்கவே விரும்புகிறது.
தொலைந்து போக ஆசைப்படுகிறேன்
யார் தேடினாலும் கிடைக்காத தொலைவிற்கு
பேசாத பொழுதும்
பேசிக் கொண்டே இருக்கிறது
பேசிய நினைவுகள்
மாற்றமும் இல்லை
மகிழ்ச்சியும் இல்ல
விதி வரைந்த பாதையில்
என் வாழ்க்கை பயணம்
உண்மை இல்லாத உறவுகளுடன்
ஒட்டியிருப்பதை விட
ஒதுங்கி இருப்பதே மேல்
துடிக்கும்போது யாரும்
கவனிக்கமாட்டார்கள்
நின்றுவிட்டால் பலரும்
துடிப்பார்கள்
விருப்பங்கள் ஏதுமில்லை
விரும்பிய ஒன்றை
இழந்த பிறகு
படிப்பு கற்றுத்தருவதை விட
சில உறவுகளின் நடிப்பு
சிறப்பாக கற்று கொடுக்கின்றது
வாழ்க்கையை
தேடியது கிடைத்ததும் இல்லை.
கிடைத்தது நிலைத்ததும் இல்லை.
மனதளவில் எவராலும்
உங்களுக்கு வலி ஏற்படுத்த முடியாது
நீங்கள்தான் உங்களைச் சுற்றி நிகழும
ஏதோவொன்றிற்கு எதிர்செயலாக
வலியை உருவாக்குகிறீர்கள்
அடிபடும் போது தான் நிதானம் வருகிறது
வார்த்தையாலும் சரி
வாழ்க்கையிலும் சரி
எங்கேயோ தொலைந்துவிட்டது
என்னுள் இருந்த
சிரிப்பு சத்தம்
விதைத்தது அன்பென்றாலும்
விளைவது கண்ணீர் துளிகளே
அனேக இடங்களில்
உண்மையாக நேசிக்கும்
நெஞ்சத்துக்கு தான் புரியும்
பிரிவால் வரும் வலி
என்னவென்று
என்னை தொலைத்தவர்களை
நான் ஒருபோதும் தேடியதில்லை
சில உறவுகள்
நம் கற்பனையில்
மட்டும் தான் சொந்தம்
நிஜத்தில் அல்ல
வலிகளை மறைத்து போலி
வேடமிட்டு புன்னகைக்கிறது
பல முகங்கள்
பேசி பயனில்லாத போது
மௌனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது
அன்பு வைத்தவர்களுக்கு மட்டும்
எப்போதும் இரண்டு தண்டனை
ஒன்று பிரிவு
மற்றொன்று நினைவு
யாரிடம் அன்பை
எதிர்பார்த்தோமோ
அவர்களிடமிருந்து
வருவதெல்லாம்
ஏமாற்றங்கள் தான்
எவரையும் உலகமென்று நினைத்துக் கொள்ளாதீர்
பிறகு உங்கள் உலகம் சுழலாமல்
அங்கேயே நின்று விடும்
வருத்தங்களை வாய்விட்டு கூட
சொல்லமுடியாத வாழ்க்கையை தான்
இங்கு பலபேர் வாழ்ந்து கொண்டு
இருக்கிறார்கள்
உயிரோடு இருக்கிறேன்
ஆனால் என்னவென்று
தெரியாத காரணங்களால்
உடைந்து இருக்கிறேன்.
தேடும் போது
கிடைக்கவில்லை என்றால்
இருக்கும் போது
கண்டுக்கொள்ளவில்லை
என்று அர்த்தம்
எல்லாமே சில காலம் தான்
அது உறவாக இருந்தாலும் சரி
உயிராக இருந்தாலும் சரி
ஒருதுளி அன்பை கொடுத்து
நூறுதுளி கண்ணீரை விலை கேட்பதுதான்
இந்த வாழ்க்கை
இதயம் வெளிப்படுத்த
முடியாத வார்த்தைகள்
தான் கண்ணீர்
தேவைக்கு அதிகமான
நினைவுகளும் கடனும்
தூக்கத்தை பறித்துக்கொள்ளும்
சொல்லி அழத் தெரியாதவர்களுக்கு
உறக்கமில்லா இரவுகள் தான் சொந்தம்
இழக்கும் போது இல்லாத சோகம்
இழந்ததை நினைக்கும் போது
இரட்டிப்பாகிறது
சில நாள் பேசாமல்
இருந்து பார்
பல பேர் காணாமல்
போய்விடுவர்
என் அன்பால்
நான் அடைந்ததை விட
இழந்ததே அதிகம்
உரிமை உண்டு என
நினைத்தாலும் நமக்கு
மதிப்பு இல்லையென
தெரியும் போது
ஒதுங்கிவிடுவதே மேல்
வலியும் வேதனையும் சென்னால் புரியாது
பட்டவனுக்குத்தான் தெரியும்
நிஜங்கள் எழுதும் கதையில்
நினைவுகள் மட்டுமே இங்கு
கதாபாத்திரங்கள்
நிஜத்தில் பாதி
கனவில் மீதி என்று வாழ்க்கை
கடந்துக்கொண்டிருகின்றது
வாழ்க்கையில் எது ஒன்று
அதிக இன்பத்தை தருகின்றதோ
அதுவே சில வேளைகளில்
அதிக துன்பத்தையும் தரும்
நாம் எந்த தவறும் செய்யா
விட்டாலும் புரிந்துகொள்ளாத
உறவுகளால் வலிகளோடு
வாழ வேண்டியுள்ளது.
நேசித்தவர் பிரியும் பொழுது
நெஞ்சம் நெருப்பாய்
கொதிக்கத்தான் செய்யும்
வலிகளை கூட தாங்கி
கொள்ளமுடிகிறது ஆனால்
வலிக்கவே இல்லை என்பதை
போல் சிரிக்க வேண்டும் என்ற
சூழ்நிலை தான் வலிக்கிறது.
சில நேரங்களில்
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
தனிமையில் இருப்பதே மேல்
சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே
நமக்கு உரிமை உண்டு
என்று பேசினாலும்
ஒரு சில நேரங்களில்
நாம் யாரோ தான்
கண்களில் மிதந்த
காட்சியெல்லாம் சில
நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது
அமைதியாக விலகுவது
ஆயிரம் வார்த்தைகளுக்கு
சமம்
நீ தான் எல்லாம்
என்றவர்கள்
இன்று நீ யார்
என்கிறார்கள்
வேடிக்கை பார்ப்பவனுக்கு
இழப்பின் மதிப்பு புரியாது
நீ பிரிந்து இருப்பது
வலிக்கவில்லை
உன்னால் இருக்க முடிகிறது
என்பது தான் வலிக்கிறது.
நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது
இங்கே பேசுவதற்கு நிறைய
வார்த்தைகள் உண்டு
ஆனால் கேட்பதற்கு
காதுகள் இல்லை
என் வலிகளை புரிந்துகொள்ள வேண்டாம்
எனக்கும் வலிக்கும் என
புரிந்து கொண்டால் போதும்
பார்ப்பவர்களுக்கு நான்
சிரிச்சிட்டே இருந்தாலும்
எனக்குள் இருக்கும்
கவலையும் கஷ்டமும்
எனக்கு தான் தெரியும்
மனது மரத்துப் போவதற்கு நோயும்
மரணமும் தேவை இல்லை
ஏமாற்றங்களும் சில துரோகங்களும் போதும்
உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள் விழித்துக்கொ(ல்)ள்கிறது…
இல்லாத போது
தேடல் அதிகம்
இருக்கின்ற போது
அலட்சியம் அதிகம்
நினைவுகளும் சுமை மனதுக்கு
தொல்லையாகும் போது
வாழ்க்கையில் எது
இன்பத்தை தருகிறதோ
அதுவே பலநேரங்களில்
துன்பத்தையும் தருகிறது
சிலரின் மௌனம் திமிரல்ல
அவர்களுக்குள் இருக்கும் வலி
நிஜம் ஒரு நொடி வலி
நினைவு ஒவ்வொரு
நொடியும் வலி
கவலைப்படத் தொடங்கும்
தருணத்தில் நாம்
எப்போதும் காயப்படுகிறோம்
பிடித்தவர்களிடம் பேசுவதற்கு
கூட பயமாக இருக்கு
தொல்லையாக நினைத்து
விடுவார்களோ என்று
கரையை தொட்டுச்
செல்லும் அலைகளுக்கு
தெரிவதில்லை சில
சுவடுகளை விட்டுச்
செல்கிறோம் என்று
நினைவுகள் நிறைந்து கொண்டே
செல்கிறது ஆனால் நிலையாய்
நிஜத்தில் பாதிபேர் கூட இல்லை
மனம் விட்டு பேச துணை
இல்லாத போது தான்
தெரிகிறது தனிமை எவ்வளவு
கொடுமையானது என்று
அன்று நமக்காக நேரம்
ஒதுக்கி அவர்கள் இன்று
நம்மையே ஒதுக்குகிறார்கள்
நிம்மதிக்கு எதிரி
எதிர்பார்ப்பு
அனைவரும் அருகில் இருந்தும்
அனாதை போல் உணர
வைக்கிறது நேசித்தவரின் பிரிவு
காயங்கள் உருவாக
கத்திகள் தேவை இல்லை
சிலரின் மாற்றங்கள் போதும்
மனித வாழ்க்கை மொத்தமும்
அன்பில் தொடங்கி
அழுகையில மூழ்கி போகிறது
ஆசைகள் மலை போல
குவிந்து இருக்கிறது
ஆனால் அது இருக்கும்
இடமோ பாதாளத்தில்
அதிக உரிமை எடுக்காதே
ஒருநாள் வெறுப்பாய்
வெறுக்கப்படுவாய்
சித்தவருக்கு தெரியும் உணவின் அருமை
இழந்தவருக்கு புரியும் உறவின் அருமை
தவறான புரிதலுக்கு
சரியான பதில் மௌனம்
மாறி விட்டோம் என்பதை விட
பல வலிகள்
நம்மை மாற்றி விட்டது
என்பதே உண்மை
இழந்ததை எண்ணி வருந்தாதே
என்று சொல்வது சுலபம்
இழந்து துடிப்பவர்களுக்குதான் தெரியும்
அது எவ்வளவு பெரிய வலி என்று
புதுமைகள் புகுந்து
விட்டால் பழைய
உறவுகள் தூக்கி
எறிய படுகிறது
யாரும் எனக்காக இல்லை என்பதை விட
யாருக்கும் நான் பாரமாக இல்லை
என்பதே உண்மை
எதிர்பார்ப்புகள் பெரும்பாலும்
கனவாக மாறுவது நம்
நம்பிக்கைக்குரிய நபரிடம் தான்
பழகிடும் உறவுகள்
விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தாங்காது
காயங்களை உருவாக்க
கத்திகள் தேவையில்லை
புரிதலற்ற வார்த்தைகளே
போதும் காயங்களை ஏற்படுத்த
வார்த்தைகளால் சிதைவது
மனம் மட்டும் அல்ல
அந்த உறவும் தான்
விரல் இடையில் நழுவிச்
செல்லும் நீர்போல நமக்கே
தெரியாமல் சில உறவுகள்
நழுவிச் செல்கிறது
புன்னகை எல்லாம்
புகைப்படத்தில் மட்டுமே
இது நிரந்தரம் இல்லா
சுயநலம் மிகுந்த உலகம்
யாரும் யாருக்காகவும்
இல்லை என்பது மட்டும் நிஜம்
அன்று எதைஎதையோ
விரும்பிய மனம் இன்று
எதையும் விரும்பாமல்
இருக்கவே விரும்புகிறது
வலி கண்ணீர்களில் தான்
இருக்கிறது என்று அர்த்தமல்ல
அது சில பொய்யான
சிரிப்பிலும் மறைந்து இருக்கும்
மனம் உடைந்த பிறகு
உடைத்தவர்கள் மன்னிப்பு
கேட்டால் என்ன?
கேட்காவிட்டால் என்ன
எனக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும்
ஏன்னெனில் என் மனதை காயப்படுத்த
அங்கே யாரும் இல்லை
கோபம் எல்லோருக்கும் திமிராகத் தான் தெரியும்
ஆனால் யாருக்கும் தெரிவதில்லை
அது வேதனையின் வெளிப்பாடு என்று
யோசித்து பேசுங்கள்
வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு
வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல
வார்த்தைகளும் தான்
விடை பெறும் ஒவ்வொருவரும்
அளவுக்கதிகமான வலிகளையும்
ஆறுதலுக்காக நினைவுகளையும்
கொடுத்து செல்கிறார்கள்
அவரவர் இடத்தில் இருந்து பார்
அவர்களின் வலி புரியும்
தூரத்தில் இருந்து பார்த்தால்
எல்லாமே எளிது தான்
Leave a Comment