இதயம் உடல் இல்லதே
உயிரு கருவறையில் நான்…


மூச்சடக்கி ஈன்றாள்
என்னை அம்மா மூச்சுள்ளவரை
காப்பேன் உன்னை……..


தாய் என்ற ஆலயத்தில்
பூஜை செய்யும் மலர்கள்
பிள்ளையின் கண்ணீர்


இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும்
தோட்டத்திற்கு கொண்டு வந்த உறவு தான் என் அம்மா


அன்பின் ஸ்பரிசம்
கவியின் நேசம்
மனதின் கீதம்
தாயின் பாதம்


வசித்த கவிதைகளில் யோசிக்க வைத்த வரி அம்மா
சுவாசித இதயங்களில் நெசிக்க வைத்த இதயம் அம்மா


நிம்மதியாய் தேடிச் செல்லும் நம் பணம் செலவு
செய்தாலும் கிடக்காத ஒரு நிம்மதியான
இடம் அம்மாவின் மதி மாடும் தான்


நம் பிறப்பதற்கும் இறப்புக்கும்
ஓர் ஒற்றுமை உண்டு
இரண்டிலும் நாம் முதலில்
அழவைப்பது நம் தாய்.


ஈரைந்து மாதங்கள் எடையோடு சுமந்தவள்
நிலை அறியும் பருவம் வரை எனக்கென
வாழ்த்தவள் என் கண்கள் உறங்கிட
அவள் விழிகள் விழித்துக்கொள்வாள் என்
பசியை தீர்த்திட உடலின் உத்திரத்தைப் பழக
அன்பின் வடிவில் எனக்கூட்டிய தெய்வம்

Categorized in: