இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16 ம் தேதி தொடங்கப்பட்டது.  தொடங்கிய முதல் நாளிலே  2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது .  இது பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா  போன்ற நாடுகளில் போடப்பட்ட தடுப்பூசியை விட அதிகம் என்று மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி  கூறுகிறார்.
நாடுமுழுவதும் ஜனவரி 17ம் தேதி மாலை வரை 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதில் 447 பேருக்கு லேசான காய்ச்சல், தலைவலி, மயக்கம்  போன்ற அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.  ஆனால் மூன்று பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  இரண்டு பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி இருக்கிறாரகள்.  இவர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள்.  ஒருவர் மட்டும் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில்   உ ள்ளனர் என்று மத்திய சுகாதார துறை சார்பாக கூறப்படுகிறது.

See also   தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு