தமிழகத்தில்  ஊரக திறனாய்வு தேர்வானது, வரும் 24ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளன.
இதில் 860 மாணவர்கள், 9 மையங்களில் பங்குப்பெற உள்ள நிலையில்.  8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், 50 சதவீத மதிப்பெண்களுடன் இருக்க வேண்டும்.  எனேவே  மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்டும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியர்களுக்கு, கல்வி உதவித்தொகையானது 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான தேர்வு, வரும் 24-ம் தேதி  நடக்க உள்ளது. இந்த தேர்விற்குக்கு 860 மாணவ – மாணவியர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஒன்பது பள்ளிகளான உத்திரமேரூர் அரசு பெண்கள், வாலாஜாபாத் அரசு பெண்கள், பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள், பி.எம்.எஸ்., அரசு பெண்கள், பச்சையப்பன் மேல்நிலை ஆண்கள், ஜே.ஜே., ஆண்கள், ஸ்ரீபெரும்புதுார் அரசு பெண்கள், குன்றத்துார் அரசு பெண்கள், சேக்கிழார் ஆண்கள் அரசு மேல்நிலை என,  தேர்வு மையமாக அமைக்கப்பட்டுள்ளன.
இதில், 10 மாணவர்கள்  400 சதுரடி பரப்பில் உள்ள  வகுப்பறையில் தேர்வெழுத ஒழுங்கு செய்யப்படும் என்பதை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறையானது  கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளனர்.