- கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை விச தொடங்கி உள்ளது.
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்குப் புதிதாக கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.
- இதனால் தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.19 கோடியாக அதிகரித்துள்ளது.
- மேலும் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 290 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார்கள்.
- இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்து இருக்கிறது.
- இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் 4.52 லட்சத்திற்கும் மேல் நாடு முழுவதிலும் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
- கொரோனா பாதிப்பு மாநிலங்ள் அளவில் மகாராஷ்டிராவில்தான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை முதல் மகாராஷ்டிராவில் இரவில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
- கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 60% மக்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

