- தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் +2 பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- இந்நிலையில் மே 3-ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- தற்போது தமிழகத்தில் மே 3-ஆம் தேதி நடைபெற இருந்த +2 தேர்வு மொழிப்பாடம் மட்டும் மே 31-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது.
- மே 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு நடத்துவது சாத்தியம் இல்லை. இதனால் முதல் தேர்வு மே 31-ஆம் தேதியும், இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது.
- ஆனால் தற்போது கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் +2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்ககளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
- இதனால் +2 பொதுத்தேர்வை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கலாம் என தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+2 exam +2 exam time table +2 language exam +2 language exam postponed +2 தேர்வு மொழிப்பாடம் 12th exam 12th language exam postponed 12th public exam 12ம் வகுப்பு பொதுத்தேர்வு cinema news tamil exam postponed language exam latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil nadu officials tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil

