Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » விளையாட்டு » டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடக்கம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!
விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடக்கம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

எழுத்து:
பகிர்க:
Summarize this blog post with:

ஹைலைட்ஸ்:

  • தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்றது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
  • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.
  • 2021 டி.என்.பி.எல். ஆம் தொடருக்கான போட்டியின் அட்டவணையை கிரிக்கெட் சங்கம் வெளியீடு.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது ஐந்தாவது சீசனாக ஜூன் 4-ம் தேதி முதல் ஜூலை 4 வரை சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல், கோவை என நான்கு நகரங்களில் நடைபெற இருக்கிறது.

டி.என்.பி.எல்.போட்டியானது தமிழகத்தில் சேலம், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய எட்டு நகரங்களை மையமாக கொண்ட அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2016 ம் துவங்கப்பட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டி.என்.பி.எல். போட்டியை இதுவரை நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டநிலையில் கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக ஐந்தாவது சீசன் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் தொடருக்கான போட்டியின் அட்டவணையை கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த போட்டி நடைபெறும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 4 ம் தேதி திருநெல்வேலியில் முதல் கட்ட போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை போன்ற நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக டி.என்.பி.எல் போட்டிகள் சேலம், கோவை மைதாங்களில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியானது நான்கு மைதாங்களில் மொத்தம் 32 போட்டிகள் கொண்ட தொடர் லீக்காக நடத்தப்படவுள்ளன. கோவை மற்றும் சேலத்தில் இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து சேலம் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல் போட்டி முடிந்தவுடன் தமிழக வீரர்கள் டி.என்.பி.எல். போட்டிக்கு தயாராகவுள்ளனர்.

அனைத்து வீரர்களும் பாதுகாப்பு கோட்பாடுகளுக்கு கொண்டுவரப்பட்டு பிசிசிஐ விதிமுறைப்படி வீரர்கள் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டு தீவிர பாதுகாப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோ பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பார்வையாளர்கள் இன்றி இந்த போட்டியை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

cricket ipl points table
விளையாட்டு

🏏 Cricket IPL Points Table 2025 – முழுமையான ஐபிஎல்2025 புள்ளி நிலை விவரம்

🏏 Cricket IPL Points Table 2025 – முழுமையான ஐபிஎல் புள்ளி நிலை விவரம் தமிழ் மொழியில்!Contents🏁 ஐபிஎல் 2025 அறிமுகம்📋 IPL போட்டியின் வடிவமைப்பு📈 அணிகள் வளர்ச்சி – தினசரி…

📅 6 Apr 2025 ⏱️ 3 நிமிட வாசிப்பு
GG vs DC WPL 2025 Match 17
செய்திகள்

GG vs DC WPL 2025 Match 17 Result: நேற்றைய WPL போட்டியில் யார் வென்றார்கள்? ஸ்கோர்கள், முக்கிய நிகழ்வுகள் & விருது பெற்றவர்கள்

ஹார்லின் டியோல் அபாரமாக ஆடி, அரைசதத்துடன் அபார இன்னிங்ஸ் வெளிப்படுத்தியதால், குஜராத் ஜயன்ட்ஸ் (GG) டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், மகளிர் பிரீமியர் லீக் (WPL)…

📅 8 Mar 2025 ⏱️ 2 நிமிட வாசிப்பு