Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » சினிமா » கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
சினிமா

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

எழுத்து:
பகிர்க:
Summarize this blog post with:

கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை காற்றை போல வேகமாக பரவி வருகிறது. பிரபல நகைசுவை நடிகர் ‘பாண்டு’ கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிர் இழந்தார்.

பாண்டு அவருடைய மனைவி குமுதா இருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிர் இழந்தார். அவருடைய மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

தமிழ் சினிமா துறையில் சிறந்த நகைசுவை நடிகரான இவர் 1975 ஆம் ஆண்டு ‘மாணவன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் 100 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். 74 வயது ஆன இவர் சின்னத்தம்பி, காதல் கோட்டை , வாய்மையே வெல்லும், வெற்றி கொடி கட்டு, சந்தோசம், லூட்டி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நகைசுவை நடிகர் பாண்டுவிற்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த அவர் பல திரையுலக பிரபலங்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை அழகுற பலகைகளில் வடிவமைத்து வந்தார்.

ADMK கட்சியின் கொடியை வடிவமைத்தவர் நடிகர் பாண்டு. அவரின் மரணத்திற்கு பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

Pradeepa

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

vishnu sahasranamam in tamil lyrics
Lyrics

விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகள்: முழு ஸ்தோத்திரம் மற்றும் பாராயண முறை

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது மகாபாரதத்தின் அனுசாசன பர்வத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு உரைத்ததாகப் போற்றப்படும், திருமாலின் ஆயிரம் திருநாமங்களைக் கொண்ட ஸ்தோத்திரம். “vishnu sahasranamam in tamil lyrics” என்று தேடுபவர்களுக்காக, பாராயணத்தில் பயன்படும்…

📅 13 Oct 2026 ⏱️ 8 நிமிட வாசிப்பு
vekkaliamman kovil
ஆன்மிகம்

வெக்காளியம்மன் கோவில் – வரலாறு, சிறப்பு மற்றும் தரிசன முழு வழிகாட்டி

தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற சக்தி தலங்கள் உள்ளன. குறிப்பாக, திருச்சியில் உள்ள வெக்காளியம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. மேலும், இது உறையூர் என்ற பழமையான நகரில்…

📅 26 Sep 2026 ⏱️ 4 நிமிட வாசிப்பு