பார்த்திபன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • ஆர். பார்த்திபன் இயக்கி , நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் விமர்சனங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் மத்திய அரசு இந்த படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை அறிவித்தது.
  • இதை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் ‘இரவில் நிழல்’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.
  • இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்படத்தில் பார்த்திபனே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
  • ஆனால் இந்த படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுமா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாக வில்லை.
  • இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார்.
  • அப்போது பார்த்திபன் இயக்கும் ‘இரவின் நிழல்’ படத்திற்கு இசையமைக்கும் தகவலை அவர் அங்கே உறுதி செய்தார்.
  • இதை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏ.ஆர்.ஆர் வாய் கேட்பது அரிது” என்று திருக்குறளில் ஏ.ஆர். ரஹ்மானை பெயரை வைத்து மாற்றி பதிவு செய்து இருக்கிறார்.
  • தற்போது இரவின் நிழல் படத்துக்கு 3 பாடல்கள் தயாராகி இருக்கிறதாம். இந்த படத்தை மிகவும் புதுமையான அனுபவத்துடன் உருவாக்க உள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
0 Shares:
You May Also Like
Read More

குட்டி ஸ்டோரி மூவி விமர்சனம்

நான்கு சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் – கெளதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு மற்றும் நாலன் குமாரசாமி ஆகியோர் குட்டி ஸ்டோரி…
இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ்
Read More

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் – எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பிரம்மாண்டம்

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் – ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம், கமல்ஹாசன் திரும்பவும் இந்தியா தாத்தாவாக வந்து ரசிகர்களை மகிழ்விப்பார்…
Read More

கேங்கர்ஸ் டிரெய்லர் – Gangers Official Trailer

Gangers Official Trailer மற்றும் கேங்கர்ஸ் டிரெய்லர் – இந்த இரண்டு சொற்களும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன! வடிவேலு…
Kuberaa Official Trailer
Read More

குபேரா (Kuberaa) அதிகாரபூர்வ ட்ரைலர் – Kuberaa Official Trailer

🎬 குபேரா அதிகாரபூர்வ ட்ரைலர் (தமிழ்) – தனுஷின் அதிரடி அவதாரம் தனுஷ் தனது கேரியரில் முதன்முறையாக மிகச் சிக்கலான, இருண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்…