ஆவாரம் பூ

Aavaram poo benefits for hair in tamil

Aavaram poo benefits for hair in tamil “இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் !” வணக்கம் நண்பர்களே , இந்த பதிவில் நாம் ஆவாரம் பூவின் நன்மைகளை பற்றி பார்க்கலாம். பொதுவாகவே ஆவாரம் பூவானது உடலின் அனைத்து பிரச்சினைகளை தீர்வாக இருக்கிறது. மாதவிடாய் கோளாறுகள் , சர்க்கரை நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் தீர்வாக இல்லாமல் தலை முடி வளர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது ஒரு காய கல்ப மூலிகை

என்பது சித்தர்களின் வாக்கு சொன்னது.

ஆவாரம் பூவின் நன்மைகள்:-

 • ஆவாரம் பூ தலை முடிக்கு சிறந்த போஷாக்கை அளிக்கிறது. பொதுவாகவே பெண்களுக்கு முடி அதிகமாக இருந்தாலே ஒரு அழகு தான். பெண் என்றாலே அதிக கூந்தல் வளர்ச்சி இருந்தால் அதுவே அந்த பெண்ணுக்கு தனிச்சிறப்பை தரும்.
 • ஆவரம் பூ பொடியானது தலை முடிக்கு சிறந்த போஷாக்கை தருகிறது.
  முடியின் வேருக்கு நல்ல சக்தியை கொடுக்கிறது. சிறந்த வலுவூட்டத்தை கொடுத்து கூந்தலை பொலிவூற செய்கிறது
 • ஆவாரம் பூ பொடியை தலைக்கு தேய்த்து குளிக்கும் போது தலையில் பொடுகு தொல்லை குறையும்.
 • வேர்வை தொல்லையால் தலைமுடியில் வரக்கூடிய நாற்றத்தை சரி செய்து கூந்தலுக்கு நல்ல மனத்தை தருகிறது.
 • ஆவாரம் பூவானது சூரிய வெளிச்சத்தால் வரக்கூடிய தூசிகளில் இருந்து கூந்தலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
 • தலைமுடி அடர்த்தியாக வளருவதற்கும் , நீளமாக வளருவதற்கும் முடியின் வேர் வரை சென்று அவற்றுக்கு வலுவூட்டதை கொடுக்கிறது.
 • ஆவாரம் பொடியை தலைக்கு தேய்த்து குளிப்பதனால் உடல் சூடு தனித்து உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது.
 • ஆவாரம் பூ பொடியை காலையில் எழுந்தவுடன் அதனை நீரில் கலந்து குடிப்பதன் மூலமும் நன்மை ஏற்படும்.

 

ஆவாரம் பூ + ஆலிவ் ஆயில் :-

 • ஆவாரம் பூவை காயவைத்து அதனை ஆலிவ் ஆயிலில் நன்கு சூடுபடுத்தி பின்பு அந்த எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடிக்கு நன்மை அளிப்பதோடு மட்டுமில்லாமல் முகத்திற்கும் அதனை பயன்படுத்தி பொலிவான தோற்றத்தை பெறலாம்.
See also  பாதாமின் சில நன்மைகள்