Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

Rain in tamil nadu

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 17, 18 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஆகஸ்ட்19, 20 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும்…

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு 33 பேருக்கு முதல்வரின் சிறப்புப் பதக்க விருதுகள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 75 -வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையங்கள் உள்பட பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் கொடி ஏற்ற உள்ளார். இதனால் அங்கு ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு நவீன சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்க விருதுகள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறையில் 9 பேருக்கு , காவல்துறையில் 3 பேருக்கு , தீயணைப்பு துறையில் 3…

Read More

2022 Kawasaki Ninja 650 bike ரூ.6.61 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பைக் மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த சமீபத்திய 2022 நிஞ்ஜா 650 பைக் மாடல் ரூ.7,000 விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் வருடாந்திர புதுப்பிப்பாக, இப்போது புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் புதிய புதுப்பிப்பின் அடையாளமாக, லைம் கிரீன் பெயிண்ட் வொர்க்கை 2022 கவாசாகி நிஞ்ஜா 650 பைக் பெற்றுள்ளது, மேலும் கீழ்பக்க அலங்கார வடிவமைப்புகளில் வெள்ளை நிறத்தையும் மற்றும் ரெட் பின்ஸ்ட்ரைப் கிராபிக்ஸையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், மெட்டாலிக் கிரே மற்றும் லைம் கிரீன் ஹைலைட்ஸ் உடன் பியர்ல் ரோபோடிக் வெள்ளை வண்ண வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இந்த புதுப்பிப்புகளைத் தவிர, மோட்டார் சைக்கிள் பாகங்கள் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே இருக்கும். சர்வதேச சந்தையில் இந்த பைக்கின் KRT பதிப்பும் உள்ளதாம். இந்த பதிப்பு லைம் கிரீன்/எபோனி/பியர்ல்…

Read More

நம் நாட்டில் பல வகையானா காய்கறிகள் விளைகின்றன. ஆனால் ஒரு சில காய்கறிகளை மட்டுமே நாம் அன்றாட உணவுகளில் பயன்படுத்துகிறோம். கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. கொத்தவரங்காயை ஒரு அருமருந்து என்றே நாம் கூறலாம். ஏன்னெனில் கொத்தவரங்காயில் ஏரளமான உயிர் சத்துக்கள் இருக்கிறது. கொத்தவரங்காயில் வைட்டமின் கே, போலிக் அமிலம், நீரில் கரையும் நார்ச்சத்து மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்து என இருவகை நார்ச்சத்துக்களும் உள்ளன. கால்சியம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு சத்து மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த உதவும் கிளைக்கோ நியூட்டிரியன்ட் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது. இருந்தாலும் இதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. அதனால் தான் இது மலிவான விலைக்கு கிடைக்கிறது. கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். கொத்தவரங்காய் நம் ஊடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது உடலில் சர்க்கரையின் அளவையும் சமபடுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் மூட்டு வலி, அஜீரண கோளாறு போன்றவற்றையும்…

Read More

நாடு முழுதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மெஷின்கள் இருக்கிறது. இதில் பல ஏ.டி.எம்., மெஷின்களில் பல நேரங்களில் பணம் இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள் ஒவ்வொரு ஏ.டி.எம்.யையும் தேடி அலைந்து அவஸ்தைப்படுகிறார்கள். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால் வங்கிகள் அபராதம் விதிக்கின்றது. அதுவே நமக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நேரத்தில் ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை என்று மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். நம்முடைய அவசர தேவைக்கு ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிகள் நமக்கு பணம் தர வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. உரிய நேரத்தில் ஏ.டி.எம்., மெஷினில் பணம் நிரப்பாத வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. ஒரு ஏ.டி.எம்.,மெஷினில் தொடர்ச்சியாக 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த ஏ.டி.எம்.,மின் வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இந்த…

Read More

நம் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துகளை தர கூடிய உலர் திராட்சையை இனி அதிக காசு கொடுத்து கடைகளில் வாங்க வேண்டாம். எந்த வித கெமிக்கலும் சேர்க்காமல், ஆரோக்கியமான உலர் திராட்சைகளை குறைந்தவிலையில் நம் வீட்டிலேயே எளியமுறையில் எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம். தேவையான அளவு விதையில்லாத திராட்சை பழங்களை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த திராட்சைகளை ஒவ்வொன்றாக எடுத்து அகலமான பாத்திரத்தில் போட்டு, அழுகிய திராட்சைகள் ஒன்று கூட இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பின் திராட்சைகளை கொஞ்சம் உப்பு தூள் சேர்த்த தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து, ஒரு முறை சுத்தமான தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் திராட்சையை வேக வைக்க வேண்டும். இதற்காக இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்க தேவையான அளவு தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இட்லி தட்டில்…

Read More

ஒரு வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌ குழந்தைகளால் பசும் பாலை செரிக்க முடியாது. ஏன்னென்றால் பசும்பாலில் புரோட்டீனும், தாதுக்களும் அதிக அளவு உள்ளது. பசும்பாலில் உள்ள புரோட்டீனையை செரிக்கும் தன்மை குழந்தைகளுக்கு இருக்காது. பொதுவாக ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் போதிய அளவு வளர்ச்சி அடையாது. அந்த நேரங்களில் குழந்தைகளுக்கு எவ்வளவு சத்துகள் தேவை என்பதை அறிந்து சரியான முறையில் உணவுகளை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பாலை விட சிறந்த உணவு வேறேதுவும் இல்லை என்றே கூறலாம். பசும்பாலில் போதுமான அளவு சத்துகள் இல்லை. பசும்பாலின் ஜீரணத் தன்மையும் மாறுபடும். பசும்பாலால் ‘கௌஸ் மில்க் புரோட்டின் அலர்ஜி’ என்ற பிரச்சனை ஏற்படும். குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் பசும்பாலில் சரியான அளவில் இருப்பதில்லை. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். பசும்பாலில் உள்ள புரோட்டீன்…

Read More

பழங்கள் எப்பொழுதும் நமக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதிலும் முக்கியமான சில பழங்கள் நமது உடலில் ஏற்படும் சில முக்கிய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு அளிக்க கூடிய பயன்களை தருகிறது. அந்த வகையில் திராட்சை மற்றும் உலர் திராட்சையில் மனித உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிரம்பி உள்ளன. பச்சை திராட்சைப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சத்துக்களை விட, உலர் திராட்சையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. கருப்பு, பச்சை, கோல்டன் என்று மூன்று கலர்களில் உலர் திராட்சை கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின்னர் சாப்பிட்டால் மிகச் சிறந்த பலன்களை நாம் பெறலாம். உலர் திராட்சையின் மருத்துவ பயன்கள் : 1. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு ரத்தசோகை ஏற்படும்.…

Read More

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 113 பதக்கங்களுடன் முதலிடத்தையும், சீனா 88 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் இந்த போட்டியை நடத்திய ஜப்பான் 58 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 7 பதக்கங்களுடன் 48-ஆம் இடத்தை பிடித்துள்ளது. வழக்கம்போல இந்த ஒலிம்பிக் போட்டியிலும் பல்வேறு பிரிவுகளில் முன்பு இருந்த உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டு, பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி தொடங்கி 17 நாள்கள் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டி, அணிவகுப்பு, கண்கவா் கலை நிகழ்ச்சி மற்றும் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்து. இந்த நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பில், இந்திய அணியை சேர்ந்த மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா தேசியக் கொடியேந்தி வழிநடத்திச் சென்றாா். அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.…

Read More

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் பதக்கம் வென்று சரித்திர சாதனையைப் படைத்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை தேசமே கொண்டாடி வருகிறது. இந்நிலையில் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ் அணி, நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், ஸ்பெஷல் ஜெர்ஸியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார். இவருக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை, கிரேட் 1ல் அரசு வேலை, இலவசமாக பயணிக்க கோல்டன் பாஸ் என பரிசுகள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ் அணி நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்கப்…

Read More

கல்விக்கட்டணத்தை காரணம் காட்டி மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணத்தால் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களிடம் 85% விழுக்காடு கட்டணத்தை வசூல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் மாற்று பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். மாற்று பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சென்று மாற்று சான்றிதழ் கேட்க்கும் போது, மாணவர்கள் பாக்கி கல்விக்கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் (TC – Transfer Certificate) வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுத் தொடர்பான விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளை இன்று பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி மாற்று சான்றிதழ் (TC – Transfer Certificate)…

Read More

வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சுவையான, மலிவான பப்பாளி பழம் தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இந்த பழத்தில் விஷக்கிருமிகளை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ உயிர் சத்து இதில் நிறைய இருக்கிறது. பப்பாளி பழத்தில் மட்டுமின்றி, இவற்றின் காய், இலை, விதை ஆகியவற்றிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்து இருக்கிறது. நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்க கூடிய பப்பாளியின் மருத்துவ பயன்களை பற்றிப் பார்ப்போம். பப்பாளிப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். பப்பாளிக் காயில் வரும் பால் வாய்ப்புண்யை குணப்படுத்தும். குழந்தைகளின் உடல் வளர்ச்சி துரிதமாக்கும் பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும்.மேலும் இது எலும்பு வளர்ச்சி மற்றும் பல்லை உறுதியாக்கும். பப்பாளி காயை அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை குறையும். பிரசவித்த பெண்கள் உணவில் பப்பாளிக் காய் குழம்பை சேர்த்து கொண்டால், தாய்ப்பால் சுரப்பு…

Read More

புதினா (மிளகுக்கீரை) ஒரு மருத்துவம் நிறைந்த மூலிகை தாவரமாகும். கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவையும் நம்முடைய அன்றாட உணவில் மணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறோம். இதன் வாசனைக்காக பிரியாணி போன்ற சமையலில் பயன்படுத்துகிறோம். இது மட்டுமல்லாமல் வாயில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க இதை வாயில் போட்டு மென்றால், வாயிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். இதற்காக தான் சுவீங்கம், மெந்தோ ஃபிரஸ், மவுத் வாஷ் போன்றவற்றில் கூட புதினா பயன்படுத்த படுகின்றனர். மேலும் இதிலுள்ள மருத்துவ குணங்களை நீங்கள் தெரிந்துகொண்டால், அன்றாட உணவில் இதை தொடர்ந்து பயன்படுத்துவீர்கள். புதினாவின் மருத்துவ குணங்களை பற்றிப் பார்ப்போம். புதினாவில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்கள் நிறைந்து இருக்கும். புதினாக் கீரையில் சட்னி செய்து சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டு அருந்தலாம். புதினாவை எப்படி பயன்படுத்தினாலும் அதன் மருத்துவ குணம்…

Read More

முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நோய் தொற்று, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக சில தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பின்னர் வரும் உடல்நலப் பிரச்சனைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது, உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் தற்போது பல உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பிறகு வரும் உடல்நலப் பிரச்சனைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால் இந்நோய் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு வரும் உடல்நல பிரச்சனைகள்…

Read More