Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

Health Minister M. Subramanian

தமிழக சட்டசபையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (3வது தடுப்பூசி) போடுவது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அப்போது பேசிய விஜயபாஸ்கர், ‘கொரோனாவுக்கான இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு பூர்வாங்க பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு, ஒரு ஆண்டுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன?,’ எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசியதாவது, ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒன்றிய அரசு தடுப்பூசிகளை தடையின்றி வழங்கி வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் ஏதோ ஒரு சிலருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 97.5 சதவீதம் பேருக்கு மீண்டும் தொற்று உறுதியாகவில்லை. பூஸ்டர் டோஸ்…

Read More

மிகச் சிறிய அளவிலான நறுமணமிக்க ஓர் மூலிகை விதை தான் ஓமம் என்கிறோம். இந்த ஓமத்தில் உள்ள தைமோல் என்னும் உட்பொருள், ஓமத்திற்கு தனித்துவமான சுவையும், மணத்தையும் கொடுக்கிறது. ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஓமம் சமையலுக்கு மட்டுமில்லாமல், சில இயற்கை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓம தண்ணீரை எந்தெந்த பிரச்னைகளுக்கு குடிக்கலாம். அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம். நாள்பட்ட வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தினமும் காலையில் ஒரு கப் ஓமம் தண்ணீர் குடிக்கலாம். ஓம தண்ணீர் வாய்வுத் தொல்லைக்கு நல்ல நிவாரணம் தருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஓம தண்ணீர் இருமல், சளி, வாய், காது ஆகியவற்றினால் உருவாகும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். மேலும் கண் நோய் தொற்றுக்கும் ஓமம்…

Read More

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது பல நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக சர்க்கரை நோயைக் முற்றிலும் குணப்படுத்த ஆவாரம் பூ மிகவும் உதவுகிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் என்று பலவும் எடுத்து கொள்கிறார்கள். இது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவு வகைகளில் ஆவாரம் பூவை சேர்த்து கொண்டால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் இந்நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். ஆவாரம் பூவில் குடிநீர், துவையல், பருப்பு கலந்து கூட்டு ஆகியவை செய்து சாப்பிடலாம். ஆவாரம்பூ உடன் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து நெய் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் ஆவாரம் பூக்களை கொண்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். ஆவாரம் பூவில் ரசம், குழம்பு வைத்தும் சாப்பிடலாம். ஆவாரம் பூக்களை நிழலில் காய வைத்து பொடி செய்து…

Read More

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தேர்வு தேதிகளை ஆசிரியா் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு பணி சாா்ந்து ஆசிரியா் தேர்வு வாரியம் அறிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.  அதில் இணையவழி மூலமாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரா்கள் கடந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது . மேலும், விண்ணப்பதாரா் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய பிப்ரவரி 2-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கபட்டிருந்தது. மேலும் அதில் கணினிவழித் தேர்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வா்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தேதிகள் கொரோனா…

Read More

பொதுவாக முட்டையில் ஏராளமான புரதச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. அதிலும் பிராய்லர் கோழி முட்டையை விட நாட்டு கோழி முட்டையில் தான் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டுமே ஆரோக்கியமானது தான். இதில் மஞ்சள் கருவை விட வெள்ளைக்கருவை தான் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள் ஏன்னென்றால் இதில் கொலஸ்ட்ரால் கிடையாது. குறிப்பாக வெள்ளைக் கருவில் வைட்டமின் பி சத்து அதிக அளவு உள்ளது. இந்த வைட்டமின் பி சத்து நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம் . எலும்புகள் முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் அதிகளவு உள்ளதால், இவை நமது எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. கால்சியம் பற்றாக்குறையினால் எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் இந்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிக அளவு உட்கொள்ளலாம். மேலும் எலும்புகளில் ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்…

Read More

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெல்டர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பணியின் பெயர்  வெல்டர் பதவிகள் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு பணியிடம் தமிழ்நாடு தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மொத்த காலிப்பணியிடங்கள்  05 விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்  07.09.2021 மேலும் முழு விவரங்களை : https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/610e75357e39217e9941614f என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Read More

சமூக பாதுகாப்புத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆலோசகர் பதவிகள் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி கொடுக்கப்பட்டுள்ளது. நேர்காணல் (interview) மூலம் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் சமூக பாதுகாப்புத் துறை பணியின் பெயர் ஆலோசகர் பதவிகள் கல்வித் தகுதி உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பணியிடங்கள் செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி தேர்வு முறை  நேர்காணல் மொத்த காலிப்பணியிடங்கள்  9 விண்ணப்பிக்கும் முறை  தபால் விண்ணப்பிக்க கடைசி நாள் 10/09/2021 மேலும் முழு விவரங்களை : https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/08/49b8a38c_100554569_P_3_mr.jpg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.…

Read More

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிகளில் நாளை அனுமதிக்கப்படமாட்டார்கள். தடுப்பூசி போடாமல் ஆசிரியர்கள் இருந்தால், அந்த பள்ளிகள் திறக்கப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, “தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் திருப்திகரமாக செய்யப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிகள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். கட்டாயம் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும். ஒருவேளை அவர்களின் முகக் கவசங்கள் கிழிந்து விட்டாலோ அல்லது மறதியில் முகக்கவசம் அணியாமல் வந்தாலோ அவர்களுக்கு பள்ளியிலேயே முகக்கவசம் தர…

Read More

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் (Trainee Engineer-I) மற்றும் திட்ட பொறியாளர் (Project Engineer-I) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது . இந்த வேலைக்கு கல்வித்தகுதி B.E/B.Tech/Degree என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனத்தின் பெயர் BEL (BHARAT ELECTRONICS LIMITED) வேலையின் பெயர் Trainee Engineer -I, Project Engineer-I மொத்த காலியிடங்கள் 14 1.Trainee Engineer-I   10 2. Project Engineer-I   04 கல்வித் தகுதி B.E/B.Tech/Degree from a recognized university/board தேர்வு செய்யப்படும் முறை Short Listing/Written Exam வயது வரம்பு Trainee Engineer I – 25 years, Project Engineer I – 28 years விண்ணப்பிக்கும் முறை Online அதிகாரபூர்வ இணைய தளம் https://www.bel-india.in/ விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2021 விண்ணப்பக்…

Read More

அல்சர் என்பது ஒருவகைப் புண். இது வயிறு மற்றும் சிறுகுடலின் உட்சுவர்களில் ஏற்படும். சரியான நேரங்களில் நாம் சாப்பிடாமல் இருந்தால், நம் வயிற்றில் உணவைச் செரிக்க கூடிய அமிலமானது வயிற்றை அரித்து புண்களை ஏற்படுத்துகிறது. அல்சரின் அறிகுறிகள் வயிற்றின் மேல் பகுதியில் வலி, குமட்டல், உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், ரத்த வாந்தி, நெஞ்சு வலி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும். இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில், வயது வித்தியாசமின்றி பெரும்பாலோனர் அல்சர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்காக கண்ட கண்ட மருந்துகளை சாப்பிடுவதை விட எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாதா ஒரு சில இயற்கை வைத்திய முறைகளை கையாளுவோம். ஒரு சில இயற்கை மருத்துவம் கரும்புச்சாற்றில்1/2 ஸ்பூன் சுக்குத்தூளைக் கலந்து காலை வேளையில் குடிக்கலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச்…

Read More

தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர், கிரேடு- II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பில் மொத்த காலிப் பணியிடங்கள் 50 என கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.09.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணுடன் இணைத்து ஒரு முறை பதிவினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஒரு முறை டிஎன்பிஎஸ்சி இணையத்தில் பதிவு செய்தால், ஐந்து வருடங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு பொது சேவை வழக்குத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்: TNPSC – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பணியின் பெயர் : Assistant Public Prosecutors, Grade-II மொத்த காலிப்பணியிடங்கள் : 50 கல்வித் தகுதி: அரசு…

Read More

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(DRDO) இருந்து காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprentice பதவிக்காக 38 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதி, கணிதம் மற்றும் அறிவியில் பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் www.drdo.gov.in. என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பெயர் DRDO பணியின் பெயர் Apprentice மொத்த காலிப்பணியிடங்கள் 38 விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2021 விண்ணப்பிக்கும் முறை Online அதிகாரப்பூர்வ வலைத்தளம்   rac.gov.in. கல்வித்தகுதி கணிதம் மற்றும் அறிவியில் பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய அரசின் DRDO Apprentice பதவிக்கான மொத்த காலிப்பணியிடங்களின் முழு விவரங்கள் பின்வருமாறு Mechanic Motor…

Read More

இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ள செப்டம்பர் மாதத்தில் வங்கிகள் சுமார் 12 நாட்கள் வரை செயல்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலில் வார இறுதி நாட்கள், மத நிகழ்வுகள் மற்றும் பண்டிகை விடுமுறைகளும், மாநிலங்களுக்கான விடுமுறைகளும் அடங்கியுள்ளது. இந்த விடுமுறை நாட்களை நினைவில் வைத்து, வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. RBI-யின் உத்தரவு படி வரும் செப்டம்பர் மாதத்திற்கான முழு விடுமுறை நாட்களின் விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 5 ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை. செப்டம்பர் 8 ஆம் தேதி – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி நாள் அன்று கெளவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது. செப்டம்பர் 9 ஆம் தேதி – தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக்…

Read More

சுவையான மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா பலருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ். இந்த கொரோனா காலத்தில் வீட்டியே சுற்றி சுற்றி வரும் குழந்தைகளுக்கு இது போன்ற பிடித்தமான ஸ்நாக்ஸ்களை சுலபமாக வீட்டிலேயே செய்துக்கொடுக்கலாம். ரிப்பன் பக்கோடா எப்படி செய்வது என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 1 கப் கடலை மாவு – 1 /2 கப் வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) – 1 /4 தேக்கரண்டி பெருங்காயம் – ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப) எள்ளு – 1 /2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிக்க தண்ணீர் தேவையான அளவு செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, எள்ளு, வெண்ணெய், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக மாவு பிசைந்து கொள்ளவும். பின்னர் வாணலில் பொரிப்பதற்கு ஏற்ற அளவு…

Read More