தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 512 பேருக்கு தமிழகத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 159 பேர் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 24 லட்சத்து 75 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 13 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். ஆனால் தினசரி உயிரிழப்பு மீண்டும் நூற்றுக்கு மேல் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 118 உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 39 ஆயிரத்து 335 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டங்களைப் பொருத்தவரை கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 563 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 493 பேருக்கும், சேலத்தில் 302 பேருக்கும்,…
Author: gpkumar
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை டிசம்பர் மாதத்திற்குள் அனுப்ப முயற்சித்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்த திட்டத்தை வெகுவாக பாதித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ தொடங்கி உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும். மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இரண்டு ஆளில்லாத விண்கலத்தை இந்தியா விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இதில் முதலாவது விண்கலத்தை டிசம்பர் மாதத்திற்குள் அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் இந்த திட்டத்திற்கு தேவையான…
Chennai CIPET கம்பெனியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Chief Manager காலிபணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி Any Degree, MBA, B.Com, BE, B.Tech/ Master Degree என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை(Chennai) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனத்தின் பெயர் : Chennai CIPET பணியின் பெயர் : Chief Manager கல்வித் தகுதி : Any Degree, MBA, B.Com, BE, B.Tech/ Master Degree பணியிடம் : Chennai தேர்வு செய்யப்படும் முறை : Interview மொத்த காலிப் பணியிடங்கள் : 8 மாதச் சம்பளம் : Rs.1,23,100 வரை விண்ணப்பிக்கும் முறை : Online விண்ணப்பிக்க கடைசி நாள் : 07/07/2021 மேலும் முழு விவரங்களை : https://www.cipet.gov.in/job-opportunities/downloads/19-06-2021-001/Advertisement.pdf என்ற…
Chennai District அதிகாரபூர்வ இணையதளத்தில் Law Officer காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.chennai.nic.in விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு கல்வித்தகுதி Graduate என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை (Chennai) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனத்தின் பெயர் : Chennai District Collector Office பணியின் பெயர் : Law Officer கல்வித் தகுதி : Graduate பணியிடம் : Chennai தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் (Interview) விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (Online) விண்ணப்பிக்க கடைசி நாள் : 08/07/2021 மேலும் முழு விவரங்களை: https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/06/2021061873.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
தமிழக சட்ட மன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதில் குறிப்பாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பில், ஆயுதப்படை போலீஸ் ஐஜிபி-யாக இருந்த ஜெ.லோகநாதன் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக இருந்த எம்.டி. கணேஷ்மூர்த்தி ஹெட் குவார்ட்டர்ஸ் ஐஜிபியாகவும், திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன் காவலர் தேர்வு பள்ளியின் எஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக இருந்த டி.பி.சுரேஷ்குமார் திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்படுவதாகவும், காவலர்…
கொரோனா வகைகளில் டெல்டா வகை மாறுபாடு மிக அதிகளவில் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் சமீப நாட்களாக டெல்டா, டெல்டா பிளஸ் என மாறுபாடு அடைந்து வருகிறது. இந்த டெல்டா வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டது ஆகும். இது ஏற்கெனவே கண்ட றியப்பட்ட வைரசை விட அதிகவேகமாக பரவும் திறன் வாய்ந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போதுடெல்டா பிளஸ் தொற்று பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரிய மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த தொற்றுகள், அரசுகளை கவலை அடைய வைத்துள்ளது. குறிப்பாக டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு காரணமாகி விடும் என்றும் அஞ்சப்படுகிறது. தற்போது உலகில் 85க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 10 மாநிலங்களில் 48 பேர் டெல்டா பிளஸ்…
கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு அரசு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. இந்த காலக்கெடு பல்வேறு காரணங்களால் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாது எனவும், ஜூலை 1- ஆம் தேதிக்கு பிறகும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. மேலும் பிக்சட் டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு…
இந்திய ராணுவம் 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் ஜூலை 20 ஆம் தேதிக்குள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், வேட்பாளர்கள் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு 2021 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்திய ராணுவம் அம்பாலா, லக்னோ, ஜபல்பூர், பெல்காம், புனே மற்றும் ஷில்லாங் ஆகிய நாடுகளில் ஆட்சேர்ப்பு பணி இடங்கள் உள்ளன. வேட்பாளர்கள் தாங்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களின்படி இடங்கள் ஒதுக்கப்படும். அட்மிட் கார்டுகள் (இந்திய ராணுவ ஜி.டி. ஆட்சேர்ப்பு 2021) பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும். விண்ணப்பிக்க தொடக்க தேதி – 06 ஜூன் 2021 விண்ணப்பிக்க கடைசி தேதி – 20 ஜூலை 2021 காலி இடங்கள் – Soldier General Duty (பெண்கள் ராணுவ போலீஸ்) – 100 போஸ்ட் கல்வி தகுதி – வேட்பாளர்கள் 45%…
கோடைக்காலத்தில் நாம் எல்லோரும் வெயில் தாக்கத்தைத் தணிக்க குளிர்ச்சி தரக்கூடிய உணவுப் பொருட்களைத் தேடுவோம். அப்படி நம் உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய உணவு பொருட்களில் ஒன்று தான் தயிர். இதை பலரும் மதிய உணவின் இறுதியில் விரும்பி சாப்பிடுவார்கள். தயிர் புத்துணர்ச்சி அளிப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களையும் அளிக்கிறது. தயிரில் வைட்டமின் பி -2, வைட்டமின் பி -12 மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம்,பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், சில உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிட்டால், செரிமானத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் சரும பிரச்சனைகளையும் உருவாக்கும். அதனால் தயிர்சாப்பிடும்போது சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அப்படி எந்தெந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பார்ப்போம். மீன்: மீன் மற்றும் தயிர் இரண்டிலும் அதிக புரதம் உள்ளது. ஒரே நேரத்தில் அதிக புரதச்சத்துக்களைக் கொண்ட இவ்விரண்டு உணவு பொருட்களையும் சாப்பிட…
இந்திய விமானப்படையில் 1515 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி 10 / 12ம் வகுப்பு, டிகிரி என கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம் : Indian Air Force பணியின் பெயர் : LDC, Hindi Typist, Store Keeper, MTS & Various மொத்த காலிப்பணியிடங்கள் : 1515 விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.06.2021 கல்வித் தகுதி: 10 / 12ம் வகுப்பு, டிகிரி வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை மேலும் முழு விவரங்களை https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
தமிழக ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை ஜூன் 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த மாதத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது. கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் இந்த நிவாரணம் வழங்கும் பணிகள் தாமதமாகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான ரூ.2,000-மும் வருகின்ற ஜூன் 25 ஆம்…
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கணிசமாக குறைந்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே பாடம் கற்றுக் கொள்ளலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் அல்லது லேட்டாப் போன்ற வசதிகள் இல்லாததால் ஆன்லைன் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அதனால், தற்போது நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களின் பட்டியலை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு சம்க்ரா சிக்ஷாவின்…
இன்றைய சூழலில் கொரோனாவைத் தடுக்கும் வலுவான ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்கிறது அறிவியல் உலகம். தடுப்பூசி குறித்து நாள்தோறும் பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் எழுந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் இயங்கும் GeneOne Life Science, நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான கார் முத்துமணி, தடுப்பூசி குறித்த சந்தேகங்களும், குழப்பங்களும் விளக்கம் அளித்துள்ளார். அதை பற்றி பார்ப்போம். தற்போது என்னென்ன வகையான தடுப்பூசிகள் இருக்கின்றன? அவற்றுக்கிடையே என்ன வேறுபாடு? கோவிஷீல்டு, கோவேக்சின், ஃபைசர், மாடர்னா போன்ற பல தடுப்பூசிகள் உள்ளன. இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தடுப்பூசியும் வெவ்வேறு வகையான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் விதத்தில் வேறுபடுகின்றன. உதாரணத்துக்கு, கோவிஷீல்டு மனிதக் குரங்குக்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. கோவேக்சின் செயலற்ற நிலையில் உள்ள முழு வைரஸையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஃபைசர் mRNA தொழிலநுட்பத்தில்…
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியத்தில் உருவான ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டாகும் என்று படக்குழு மிகவும் எதிர்பார்த்தது. ஆனால் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்த படம் நேற்று OTT-யில் வெளியானது. மேலும் இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் சிங்கள் பாடல்களும் இணைய வாயிலாகவே வெளியிடப்பட்டன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படத்திற்கான பணிகள் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இந்த படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பரில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT-யில் வெளியிடவாய்ப்புள்ளதாக அப்போதே கூறப்பட்டது. இறுதியில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை OTT-யில் 17 மொழிகளில் வெளியிட்டு அசத்தி உள்ளது. 17 மொழிகளில் இணைய வழியில் வெளியாகும்…
