தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கணிசமாக குறைந்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே பாடம் கற்றுக் கொள்ளலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் அல்லது லேட்டாப் போன்ற வசதிகள் இல்லாததால் ஆன்லைன் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அதனால், தற்போது நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களின் பட்டியலை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு சம்க்ரா சிக்ஷாவின்…
Author: gpkumar
இன்றைய சூழலில் கொரோனாவைத் தடுக்கும் வலுவான ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்கிறது அறிவியல் உலகம். தடுப்பூசி குறித்து நாள்தோறும் பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் எழுந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் இயங்கும் GeneOne Life Science, நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான கார் முத்துமணி, தடுப்பூசி குறித்த சந்தேகங்களும், குழப்பங்களும் விளக்கம் அளித்துள்ளார். அதை பற்றி பார்ப்போம். தற்போது என்னென்ன வகையான தடுப்பூசிகள் இருக்கின்றன? அவற்றுக்கிடையே என்ன வேறுபாடு? கோவிஷீல்டு, கோவேக்சின், ஃபைசர், மாடர்னா போன்ற பல தடுப்பூசிகள் உள்ளன. இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தடுப்பூசியும் வெவ்வேறு வகையான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் விதத்தில் வேறுபடுகின்றன. உதாரணத்துக்கு, கோவிஷீல்டு மனிதக் குரங்குக்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. கோவேக்சின் செயலற்ற நிலையில் உள்ள முழு வைரஸையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஃபைசர் mRNA தொழிலநுட்பத்தில்…
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியத்தில் உருவான ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டாகும் என்று படக்குழு மிகவும் எதிர்பார்த்தது. ஆனால் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்த படம் நேற்று OTT-யில் வெளியானது. மேலும் இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் சிங்கள் பாடல்களும் இணைய வாயிலாகவே வெளியிடப்பட்டன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படத்திற்கான பணிகள் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இந்த படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பரில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT-யில் வெளியிடவாய்ப்புள்ளதாக அப்போதே கூறப்பட்டது. இறுதியில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை OTT-யில் 17 மொழிகளில் வெளியிட்டு அசத்தி உள்ளது. 17 மொழிகளில் இணைய வழியில் வெளியாகும்…
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. கொரோனா மூன்றாவது அலை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் கொரோனா இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலையை சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் கொரோனா நோய் தொற்று இன்னும் ஒரு வருடத்திற்கு பொது சுகாதார துறைக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று மருத்துவ நிபுணர்களின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், வைராலஜிஸ்டுகள், 40 சுகாதார வல்லுநர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பேராசிரியர்கள் ஆகியோரின் கணக்கெடுப்பில், தடுப்பூசிகளில் கணிசமான பயன்பாடு கொரோனா பரவலைக் கட்டுப்பட்டுத்தும் என்பதைக் காட்டுகிறது. கொரோனா வைரஸின் மூன்றாம் அலையால், குழந்தைகள்…
கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினரை முன் களப்பணியாளர்களாகவும், இவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு செய்திக்குறிப்பில், கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூபாய் 58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம், முன் களப்பணியாளர்களான காவல்துறையினருக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். இதன் மூலம்,சுமார் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் பப்ஜி மதன் இன்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டு வருக்கிறது. மதனின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் சேலத்தை சேர்ந்த மதன் குமார் ”டாக்சிக் மதன் 18” என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் ‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மதன் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். இதனால் அவரின் யூடியூப் சேனலுக்கு பார்வையாளர்கள் அதிகமாகி, 7.8 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் சேர்ந்துள்ளார்கள். பெண்களை ஆபாசமாக பேசி எல்லையை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது மேலும், மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்…
அண்ணா யூனிவர்சிட்டியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Peon & Clerical Assistant பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி 5th, 8th, Any Degree என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை(Chennai) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும்,விருப்பமமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Anna University பணியின் பெயர் : Peon & Clerical Assistant கல்வித்தகுதி : 5th, 8th, Any Degree பணியிடம் : Chennai தேர்வு செய்யப்படும் முறை : Interview மொத்த காலிப்பணியிடங்கள் : 14 ஒரு நாள் சம்பளம் : Rs.760 விண்ணப்பிக்கும் முறை : Online விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.06.2021 மேலும் முழு விவரங்களை : https://www.annauniv.edu/pdf/ACOE_TEMP.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கணிசமாக குறைந்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5 % மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு உண்டு என்ற அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அரசுப் பள்ளியில் மாணவர்…
தமிழகத்தில் நீட் (NEET) தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவுட்டுள்ளார். ஒன்பது பேர் கொண்ட இந்த குழுவில் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மருத்துவர் ஜவஹர் நேசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சட்டத்துறை அரசு செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வருகிற 21-ம் தேதி இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் நீட்…
தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதில் குறிப்பாக பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புதிய கலெக்டர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்திற்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது TNPSC அமைப்புக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு செயலாளராக உமாமகேஸ்வரி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றிய உமா மகேஸ்வரி அவர்கள் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பல்வேறு அரசு அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பாலச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப்…
தென் ஆப்பிரிக்காவில் பூமியை தோண்டும் போது சில மர்மக்கற்கள் கிடைத்துள்ளது. அதனை வைரம் என்று நம்பி அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகிறார்கள். கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தென்கிழக்கில் 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் உள்ள குவாஹலதி கிராமத்தின் புறநகரில் ஒரு கால்நடை வளர்ப்பவர் சில மர்ம கற்களைக் கண்டுள்ளார். இந்த கற்களை வைரம் என்று நம்பிய அவர், கிராம மக்களிடம் இது பற்றி கூறியுள்ளார். இதனால் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர். அந்நாட்டு அரசாங்கம் அந்த கற்களை சேகரிப்பதற்காகவும், பகுப்பாய்வு செய்வதற்காகவும் புவியியல் மற்றும் சுரங்க வல்லுநர்கள் குழுவை இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. இந்த கற்கள் வைரங்கள் அல்ல, இங்குள்ளவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அங்கு அதிகாரிகள் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எடுத்து கூறி, பூமிக்கு அடியில் கற்களை தோண்டும் மக்களை அப்பகுதியை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். ஆனாலும் மக்கள் கற்களை தோண்டியெடுக்கும்…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடன் வாங்கிய சுய உதவி குழு உறுப்பினர்கள் மாத தவணையை கட்டவில்லை என்றால் நாளொன்றுக்கு 1,000 ரூபாய்க்கு 20 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் என்று மகளிர் சுய உதவி தலைவி மிரட்டிய பேசியுள்ள அதிர்ச்சி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு அரசு தற்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த ஊரடங்கால் பலரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் ஏஜென்சிகள், நிறுவனங்கள் கடன்களை வசூலிப்பதில் கடுமையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் கடன் வசூலிப்பதில் கறார் காட்ட கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் மக்களுக்கு அரசு பல நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை வசந்தம் நகரில்…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது எந்த படிவத்திற்கும் கட்டணம் வசூலிக்க கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் இந்த ஆண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. தற்போது தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை…
மத்திய அரசின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் Senior Resident, Specialist பணியிடங்களுக்கு Diploma, PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் நிறுவனம் : ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் (Employee’s State Insurance Corporation-ESIC) 1.பதவியின் பெயர் : Senior Resident, Specialist காலியிடங்கள் : 8 கல்வித்தகுதி : Diploma, PG Degree விண்ணப்பிக்கும் முறை : online வயது வரம்பு : 45 சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ.7000- 8000/- பணியிடம் : இமாச்சல பிரதேசம் தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் 2.பதவியின் பெயர் : Stenographer, UDC காலியிடங்கள் : 6552 கல்வித்தகுதி : 12th std , degree விண்ணப்பிக்கும் முறை : online சம்பளம் : மாதம் ரூ.25,500-…
