Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழங்களும் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தியது. அதன்படி சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற தேர்வில் சுமார் 2 லட்ச மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடந்த முதல் செமஸ்டர் தேர்வில் 50,000-திற்கும் அதிகமானோர் ஆன்லைன் தேர்வு எழுதினர்.

அதேசமயம் சுமார் 60,000 மாணவர்கள் டிசம்பர் 21 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 10 ஆம் தேதிகளில் மாணவர்கள் தங்களின் அரியர் தேர்வுகளை எழுதியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளில் தங்களின் அரியர் தேர்வுகள் எழுதுவதற்காக சுமார் 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இருப்பினும், கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆகஸ்ட் மாதம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து ரத்து செய்யப்பட தேர்வுகளை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட முதல் செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை இந்த வார இறுதிக்குள் பல்கலைக்கழகம் வெளியிடவுள்ளது.

 

Share: