நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வுகள் ஏதும் இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பிற்கு 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிபிஎஸ்இ, மெட்ரிக், ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ மற்றும் ஐபி போன்ற பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் முழு கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது.