இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் கக்சு ஆகும் இந்த மாவட்டமானது குஜராத் மாநிலத்தில் உள்ளது கக்சு மாவட்டத்தின் பரப்பளவு 45,652 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

சட்டமன்றத் தொகுதிகள்ஆறு
நாடாளுமன்ற தொகுதிகள்ஒன்று
வருவாய் வட்டங்கள்பத்து
கிராமங்கள்969
மக்கள் தொகை2,092,371
மாவட்டத்தின் இணையதளம்https://www.kachchh.nic.in
  • கக்சு மாவட்டம் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் ஆக இருப்பதற்கு அதன் பரப்பளவு ஒரு காரணமாக உள்ளது. புஜ் நகரமானது மாவட்டத்தின் தலைமையிடமாக கருதப்படுகிறது நகரமானது கட மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
  • கக்சு மாவட்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோட்டின் அருகே அமைந்துள்ளது.
  • ரான் ஆப் கட்ச் என்ற உப்பு பாலைவனம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ரான் ஆப் கட்ச் பாலைவனம் உலகிலேயே மிக பெரிய உப்பு பாலைவனம் என்ற சிறப்பு பெயரை பெற்றுள்ளது
  • ரான் ஆப் கட்ச் பகுதியில் இருக்கக்கூடிய சுமார் நூற்று ஏழு கிராமங்களில் உள்ள மக்கள் உப்பளங்களில் உப்பு எடுக்கும் தொழிலை சுமார் ஆறு நூறு ஆண்டுகளாக அவர்களின் பாரம்பரிய முறைப்படி செய்து வருகிறார்கள்.
  • இந்தியா உற்பத்தி செய்யக்கூடிய 180 டன் உப்பு உற்பத்தியில் கக்சு மாவட்டம் மிகப்பெரிய பங்கை வகுக்கிறது. இந்த மாவட்டம் கடந்த சுமார் 200 ஆண்டுகளில் ஏறக்குறைய 90 முறை நிலநடுக்கத்தை சந்தித்துள்ளது.
  • கக்சு மக்களின் நெசவுத் தொழில் மிகவும் புகழ்பெற்றது அதற்கு காரணம் வேற்று இன குழுவினரிடம் இருந்து தங்களை தனித்து காட்டிக் கொள்ள இவர்கள் உடைகள் அணிகலன்கள் சிறப்பாக உருவாக்குகிறார்கள். உடைகளில் பலவகை வண்ணங்கள் கண்ணாடித் துண்டுகள் போன்றவை பயன்படுத்தி மிக சிறப்பாக துணிகளை நெசவு செய்கிறார்கள்.