‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் தனுஷூக்கு கதாநாயகியாக, மலையாள நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார்.
மேலும், முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் யோகி பாபு, லால் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் இருந்தாலும், பின்னணி வேலைகள் சில நடைபெற்று வருகின்றன.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், தனது ட்விட்டர் பக்க பதிவில் கர்ணன் படத்தை பார்த்து திகைத்துபோனதாக கூறியுள்ளார். தனுஷ், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவை நினைத்து பெருமை படுகிறேன். கர்ணன் அனைத்தும் கொடுப்பான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

See also  வசூல் சாதனை படைத்திருக்கும் ஜதி ரத்னலு திரைப்படம்

Categorized in: