ஹைலைட்ஸ்:

  • கீழாநெல்லியில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளது.
  • கீழாநெல்லியின் இலையில் ‘பில்லாந்தின்’ என்னும் மூலப்பொருள் உள்ளது.
  • கீழாநெல்லி மஞ்சள் காமாலை, மாலைக் கண் நோய், கண் பார்வை மங்குதல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

பொதுவாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளரகூடிய செடிகளில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளது. இதை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம். இந்தவகையில் அற்புதமான மூலிகைக் கீரைதான் ‘கீழாநெல்லி’.

கீழாநெல்லியை கீழ்வாய் நெல்லி, கீழ்க்காய் நெல்லி என்றும் அழைப்பார்கள். இந்த குறுச்செடி நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இந்த செடியின் இலைகள் புளியமரத்தின் இலைகளைப் போலவே இருக்கும். இந்த செடியில் பூக்களும் காய்களும் இலைகளுக்குக்கீழ் காணப்படும்.

கீழாநெல்லியின் இலையில் ‘பில்லாந்தின்’ என்னும் மூலப்பொருள் இருக்கும். மேலும் இதில் பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும். இந்த செடிகளின் இலைகளுக்குக் கீழே நெல்லிக்காய் வடிவத்தில் காய் இருப்பதால் இதை ‘கீழாநெல்லி’ என்று அழைக்கிறோம். இதேபோல் இலைகளுக்கு மேலே காய் காய்க்கும், மற்றொரு மூலிகையை உள்ளது. இதை மேலாநெல்லி என்று அழைக்கிறார்கள். இதுவும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

கீழாநெல்லியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

கீழாநெல்லி செடியின் அனைத்து பாகங்களும் பயன்தரக் கூடியவையாக உள்ளது. இது கீரை வகையை சார்ந்தது. இக்கீரையில் கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு ஆகிய நான்கு சுவைகளும் இருக்கும்.

மஞ்சள் காமாலை

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதை மோரில் கலந்து சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் ‘சி’ மற்றும் ‘பி’ ஆல் உருவாகும் கல்லீரல் பாதிப்பையும் இது தடுக்கும்.

சர்க்கரை நோய்

கீழாநெல்லி இலையை பறித்து உலர்ந்தி பொடியை செய்து மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம். இம்மூலிகை இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களையும் இது தடுக்கும்

கண்பார்வை

மாலைக் கண் நோய், கண் பார்வை மங்குதல் போன்றவைகளுக்கு கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் குடித்து வந்தால் கண்பார்வை சீராகும்.

See also  மாநில துப்பாக்கி ஷூட்டில் தங்கம் வென்றார் அஜித்

தலைவலி

கீழாநெல்லி வேருடன் சீரகம் மற்றும் பசும்பால், நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இதை வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமாகும்.

சொறி, சிரங்கு

கீழாநெல்லி இலை பறித்து நன்றாக சுத்தம் செய்யவேண்டும். பிறகு இந்த இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு பூசி வந்தால் அவைகள் சரியாகும்.

வயிற்றுப்புண்

ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை அரைத்து, அதை ஒரு டம்ளர் மோரில் கலந்து காலையில் பருகி வந்தால், வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை நோய்களும் சரியாகும்.

வெள்ளைப்படுதல்

கையளவு கீழாநெல்லி இலை பறித்து நன்றாக சுத்தம் செய்து நசுக்கிக்கொள்ள வேண்டும். பிறகு அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.