• தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது திருப்பத்தூர் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 80 பேருக்கு ரூ.1.19 கோடி திருப்பி வழங்கபட்டு இருக்கிறது .
  • தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்து இருந்தது.
  • தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் 42 நிலை கண்காணிப்புக்குழுவினர், 75 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள்.
  • தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லுதல், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருட்களை கொண்டு செல்லுதல் போன்றவைக்கு தடை விதித்திருந்த நிலையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம், விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பொருட்களை தேர்தல் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்பு குழுவினரும் பறிமுதல் செய்தார்கள்.
  • அனைத்து மாவட்டங்களிலும் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி ஏப்ரல்  6-ம் தேதி வரை தீவிர கண்காணிப்புப் பணிகளில் பறக்கும் படை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
  • இதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 118 பேரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரத்து 524 ரூபாயையும்  3 கோடியே 69 லட்சத்து 56 ஆயிரத்து 948 ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் பறிமுதல் செய்தார்கள்.
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமாக ரூ.4 கோடியே 80 லட்சத்து 37 ஆயிரத்து 472 கைப்பற்றப்பட்டு அரசு கருவூல அலுவலகத்தில் வைத்து இருந்தார்கள்.
  • தற்போது ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் வாகன சோதனைகள் திரும்பப்பெறப்பட்டது.
  • இதனைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம்,தேர்தல் நடத்தை விதிமுறைகள் மூலம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து திரும்பப்பெற்று கொள்ளலாம் என்று அறிவித்தது.
  • அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை இழந்தவர்கள் அதற்கான ஆவணங்களைத் திரட்டி மாவட்ட கருவூல அலுவலரிடம் சமர்ப்பித்து வந்தார்கள்.
  • இந்த ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை உரியவர்களுக்கு வழங்கினார்கள்.
வாணியம்பாடி தொகுதி
  • வாணியம்பாடி தொகுதியில் 13 பேர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 20 லட்சத்து 53 ஆயிரத்து 266 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திரும்ப பெற்று கொண்டார்கள்.
See also  12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவு 2021 
ஆம்பூர் தொகுதி
  • ஆம்பூர் தொகுதியிலும் 17 பேர் ஆவணங்களை சமர்ப்பித்து, 22 லட்சத்து 84 ஆயிரத்து 130 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திரும்ப பெற்று கொண்டார்கள்.
  • ஜோலார்பேட்டை தொகுதியிலும் 22 பேர் உரிய ஆவணங்களை சமர்பித்து 44 லட்சத்து 5 ஆயிரத்து 62 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திரும்ப பெற்று கொண்டார்கள்.
திருப்பத்தூர் தொகுதி
  • திருப்பத்தூர் தொகுதியில் 28 பேர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 31 லட்சத்து 35 ஆயிரத்து 7 ரூபாய் திரும்ப பெற்று கொண்டார்கள்.
  • இதனால் மொத்தம் 1 கோடியே 18 லட்சத்து 77 ஆயிரத்து 465 ரூபாய் மதிப்புள்ள பணம், பொருட்கள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
  • மீதமுள்ள 38 பேர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால் மீதமுள்ள 3 கோடியே 61 லட்சத்து 60 ஆயிரத்து 7 ரூபாய் மாவட்ட கருவூல அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
  • திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவன் அருள், தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்டுச்செல்லாம் என்று தெரிவித்து இருக்கிறார்.