Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
ஆபத்தான விண்கல் பூமியை நெருங்குகிறது
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல சிக்கல்கள் வரும்
தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு ஆலோசனை

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல சிக்கல்கள் வரும்

  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு 2020 -ல் ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து வந்தது.
  • அதே சமயம் கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த ஆண்டு மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
  • வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டையும்,ஆதார் கார்டையும் இணைக்காவிட்டால், அவரின் பான் எண்ணை வருமான வரித்துறை செயலிழக்கச் செய்துவிடும். எப்போது அவர்கள் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கிறார்களோ அப்போதுதான் அவரிகளின் பான் எண் செயல்படக்கூடும்.
  • இதனால் உங்கள் ஆதார் எண்ணுடன் பான் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடுவானது வரும் மார்ச் 31ம் தேதியோடு முடிவடையயுள்ளது. இதற்கு முன்பே வருமானது வரித்துறையானது பலமுறை அவகாசம் கெடுத்துள்ளது உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகும்.
  • மேலும் 10,000 ரூபாய் அபாதாரமும் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை பலர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்பது தான் உண்மை.
  • ஏற்கனவே இதற்காக பல முறை அவகாசம் கொடுத்திருக்கிறோம் மீண்டும் அவகாசம் கொடுக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும். அதிகமாக பணபரிமாற்றம் செய்யும்போது அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணபரிமாற்றம் செய்ய பான்கார்டை பயன்படுத்தும் போது அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.
  • மேலும் மார்ச் 31- ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். உடனே ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்பட தொடங்கி விடும்.
  • தற்போது மொபைல் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும். இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண்ணையும் , 10 இலக்க பான் நம்பரையும் டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
Previous Post
vinkal

ஆபத்தான விண்கல் பூமியை நெருங்குகிறது

Next Post
college

தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு ஆலோசனை

Advertisement