- பூம்புகார் தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தம் உள்ள வாக்குகளைவிட 50 வாக்குகள் அதிகமாக பதிவாகிள்ள நிலையில், அந்த பூத்துக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த முகவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
- பூம்புகார் தொகுதியில் உள்ள திருவாவடுதுறை அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 175 ஆம் எண் வாக்குச்சாவடியில் மொத்தம் 578 வாக்குகள் உள்ளநிலையில் 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி 628 வாக்குகள் பதிவாகியுள்ளன.
- இதுபற்றி சந்தேகம் எழுப்பி நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் இவர்கள் நேற்று விடிய விடிய போராட்டம் நடத்தினர். இவர்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர்.
- மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பூம்புகார் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தினை பாதுகாப்பு அறையில் கொண்டு செல்ல முயற்சித்தபோது மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
- இதனைத்தொடர்ந்து 175 ஆம் எண் பூத்தில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட வேட்பாளர்களின் முகவர்கள் வலியுறுத்தினார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

