Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் மாதம் முதல், ரயில்கள் இயக்கம் சீராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலால், கடந்தாண்டு மார்ச், 22 ஆம் தேதி முதல், ரயில்களின் இயக்கம் முழுமையாக முடக்கப்பட்டது. கொரோனா பரவல் படிப்படியாக குறைத்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டது. ஆனால் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

வரும், 2021 ஏப்ரல்மாதம் முதல், முன்பதிவில்லா மற்றும் அனைத்து ரயில் இயக்கத்துக்கு அனுமதி அளிக்க, ரயில்வே அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், டில்லி மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும், இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஓராண்டு இடைவெளிக்கு பின், அனைத்து ரயில்களின் இயக்கம் சீராகும் என, பயணியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனா பரவலின் வேகம், ரயில் இயக்கம் தொடர்பான அறிவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

Share: