- வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்தின் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைக்க பிரபல பாலிவுட் போஸ்டர் டிசைனர் ராகுல் நந்தாவை அழைத்து வந்துள்ளாராம். அஜித்தின் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறதாம்.
- அஜித் நடித்து வரும் வலிமை படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.
- இப்படத்தின் 90 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்டார்கள். அடுத்த மாதம் இந்த படக்குழு ஒரு முக்கிய பைக் ஸ்டண்ட் காட்சியை படமாக்க ஸ்பெயினுக்கு கிளம்புகிறதாம்.
- ஸ்பெயினில் 10 நாட்கள் தான் ஷூட்டிங் நடத்த உள்ளர்கள். இதை முடிந்துவிட்டால் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவடைந்து விடும் என்கிறார்கள். வலிமை படம் பற்றி ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த அப்டேட்டும் இல்லை என்பதால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் கேட்டும் பலனில்லமல் இருந்தது.
- அஜித் ரசிகர்கள் போனி கபூர் ட்விட்டர் பக்கம் வரும்போது எல்லாம் வலிமை அப்டேட் எங்கே என்று கேட்டு கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் அஜித்தின் 50வது பிறந்தநாளுக்கு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று போனி கபூர் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.
- இதைக்கேட்ட அஜித் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தார்கள். கடந்த ஆண்டு பிறந்தநாளுக்கு எந்த அப்டேட்டும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரொம்ப ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரபல பாலிவுட் போஸ்டர் டிசைனரை வரவழைத்து உள்ளார் போனி கபூர்.
- இதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் போஸ்டர் டிசைனர் ராகுல் நந்தாவை வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைக்குமாறு கூறியிருக்கிறாராம். இது தல ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி தான்.
- தங்கல், ஆமீர் கானின் பி.கே., ரித்திக் ரோஷனின் சூப்பர் 30, ரன்பிர் கபூரின் சஞ்சு ஆகிய படங்களின் போஸ்டர்களை வடிவமைத்தது ராகுல் நந்தா தான்.
- அஜித் போலீஸ் அதிகாரியாக வலிமை படத்தில் நடித்துள்ளார். அஜித்திற்கு அம்மாவாக சீனியர் நடிகை சுமித்ரா நடித்திருக்கிறார். வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
- தற்போது அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்திற்காக டி. இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாட்ட மூடில் இருக்கிறார்கள்.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

