- தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், சுமார் நாளொன்றுக்கு 8,000 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
- தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையின் மூலமும் நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்.
- இந்த பயோமெட்ரிக் முறையினால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க கூடும், அதனால் இந்த முறையை மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
- அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தற்போது பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்று மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொதுமக்கள் தங்களுடைய விரல் ரேகையைப் பதிவுசெய்வதின் மூலம் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- எனவே இந்தப் பயோமெட்ரிக் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதற்கான மாற்றுவழியை அரசு கடைபிடிக்க வேண்டும்.
- இல்லையென்றால் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றனர்.
.
alternative system in ration shops biometric system cinema news tamil corona latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today Public Public request to ration shops ration shops tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil கொரோனா நியாயவிலைக் கடை பயோமெட்ரிக் முறை
