- பொன்னியின் செல்வன் எனும் நாவல் , எழுத்தாளர் கல்கியின் மாஸ்டர் பீஸ் நாவலாகவும் அனைவரும் விரும்பி படித்துவந்த நாவலாக இருக்கிறது. தற்போது பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் திரைப்படம் தயாராகி வருகிறது.
- இந்த படத்தின் திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுத, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
- ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இத்திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
- மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு தயாராகி வருகிறது.
- இந்த படத்தின் சில காட்சிகளை மத்திய பிரதேசத்தில் படமாக்க திட்டமிட்டிருந்தவர்கள், கோவிட் வேகமாக பரவி வருவதால் அந்தத் திட்டத்தை கைவிட்டனர்.
- சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
- இந்நிலையால், பொன்னியின் செல்வன் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றிருப்பதாகவும், 2022-ல் பொங்கலை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வரும் என்று சுல்தான் புரமோஷனில் கலந்து கொண்ட கார்த்தி கூறியுள்ளார்.
- இதையடுத்து, மணிரத்னம் இயக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’, வெளியீடு தள்ளிப் போனாலும் ஆச்சரியபடுவதிற்க்கில்லை. தற்போது கார்த்திக் வெளியிட்டு உள்ள இந்த தகவலானது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
cinema news tamil latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today Ponniyin Selvan movie Release date announcement for Ponniyin Selvan movie Release date Ponniyin Selvan tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil இயக்குனர் மணிரத்னம் ஏ.ஆர். ரஹ்மான் ஐஸ்வர்யா ராய் கார்த்தி பொன்னியின் செல்வன் விக்ரம் ஜெயம் ரவி

