- சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது மூன்று பெண்கள் வந்த காரில் ரூ.6.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள்.
- உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட இந்த ரூ.6.50 லட்சம் பணத்தை பூந்தமல்லி அருகே உள்ள காக்களூர் பால்பண்ணை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துயுள்ளார்கள்.
- தமிழகத்தில்சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் வெளியாகி இருக்கிறது. இதனால் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளார்கள்.
- குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதியிலும் வாகன சோதனைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
- இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பால்பண்ணை அருகே வாகன சோதனை நடைபெற்றது.
- அப்போது மூன்று பெண்கள் வந்த காரை மடக்கி சோதனை செய்தார்கள். அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.6.50 லட்சம் பணம் இருந்தது.
- இந்த மூன்று பெண்கள் கொண்டுவந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளார்கள்.
- இதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பூந்தமல்லி தாசில்தார் அலுவலகம் கொண்டு வந்து, பூந்தமல்லி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரீத்தி பார்கவி முன்னியில் ஒப்படைத்தார்கள்.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

