- வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘23ஆம் புலிகேசி’. இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ‘24ஆம் புலிகேசி’ என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியானது.
- லைகா நிறுவனம் இணைந்து பழைய படத்தின் அதே கூட்டணியில் இந்த படத்தை உருவாக்க இருந்தது.இதைத்தொடர்ந்து இந்த படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.
- படப்பிடிப்பு தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத் தி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக இப்படத்தின் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுபறித்து கொண்டு இருந்தது.
- இதனால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை விதித்தது .
- இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் வடிவேலுவை புதிய படங்களில் ஓப்பந்தம் செய்ய தயக்கம் காட்டினார்கள்.
- கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமலிருந்த வடிவேலு, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
- இந்நிலையில்,தலைநகரம், மருதமலை, படிக்காதவன், கத்தி சண்டை ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சுராஜ் இயக்கும் இந்த புதிய படத்திற்கு ‘நாய் சேகர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- சுராஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தில் வடிவேலு ‘நாய் சேகர்’ கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது வடிவேலு மீண்டும் நாய் சேகர் வேடத்தில் நடிக்கயுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாய் சேகர் வேடத்தில் வடிவேலுவை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

