இந்தியாவில் 14-வது IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது.

இதற்கான மினி ஏலம் சென்னையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் 57 வீரர்கள் இருந்தனர். 8 அணிகள் சேர்ந்து இவர்களை ரூ.143.69 கோடிக்கு ஏலத்தில் எடுத்தன.

தமிழகத்தை சேர்ந்த 25 வயதான ஷாருக்கான் ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததுள்ளது. உள்ளூர் போட்டியில் முஸ்தாக் அலி 20 ஓவரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதனால் தமிழக வீரர்கள் மீது ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

இதேபோல மற்ற தமிழக வீரர்களான ஹரிநிஷாந்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது, எம்.சித்தார்த்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலா ரூ.25 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை பஞ்சாப் அணி 2019-ம் ஆண்டு ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பின்னர் அவரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. அதே பஞ்சாப் அணிதான் இப்போது அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கானை ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்த IPL போட்டியில் 13 தமிழக வீரர்கள் விளையாடுகிறார்கள். ஆர்.அஸ்வின், தினேஷ்கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், விஜய்‌ஷங்கர், டி.நடராஜன், முருகன் அஸ்வின், ஜெகதீசன், சாய் கிஷோர், சந்தீப் வாரியர், ஷாருக்கான், ஹரிநிஷாந்த், எம்.சித்தார்த் ஆகியோர் தற்போது IPL போட்டியில் இணைந்துள்ளனர்.