குழந்தைகளை தாக்கும் கோடைக்கால நோய்கள்

  • பருவக்கால மாற்றங்கள் உருவாகும் போது உடல் ஆரோக்கியமும் மாறுப்படும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு கோடைக்கால நோய்கள் தாக்கம் அதிகம் இருக்கும்.
  • நாம் தற்போது கோடையை எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் உடல் ஆரோக்கியத்திற்காக வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மீது நாம் தனிகவனம் செலுத்த வேண்டும்.
  • பொதுவாக கோடைகால நோய்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் சில நோய்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளலாம்​.

கொப்புளங்கள்

  • வெப்ப கொப்புளங்கள் அதிக கஷ்டங்களை தரக்கூடியது. இந்த கொப்புளங்கள் பரவக்கூடியது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் உடலில் கொப்புளங்கள் வரக்கூடும்.
  • குறிப்பாக குழந்தைகள் மண்ணில் விளையாடும் போது அவர்கள் வியர்வையோடு மண்ணும் சருமத்தில் ஒட்டிகொள்ளும். இதனால் கொப்புளங்கள் உருவாகிறது.
  • உடலின் உள்வெப்பமும், வெளியில் படும் வெப்பமும் கொதித்து கொப்புளங்களாக உருவாகும். இதை சரியாக கவனிக்காவிட்டால் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இது மிகப்பெரிய கஷ்டங்களை தரக்கூடியது.

சின்னம்மை

  • வெயில்காலங்களில் குழந்தைகளுக்கு வரக்கூடிய பொதுவான நோய்களில் சின்னம்மையும் உண்டு. இது உடல் முழுவதும் திரவம் நிறைந்த சிறிய கொப்புளங்களாக வரக்கூடும்.
  • இது குழந்தைகள் போன்றே நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் ஆகியோரையும் தாக்க செய்யும்.
  • இந்த தொற்று நோய் காற்றின் வழியாக பரவுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட நபர் இருமும் போது அல்லது தும்மும் போது பரவுகிறது. இந்த நோயின் பாதிப்பு தீவிரமானால் அது மோசமான பாதிப்பை உருவக்கிவிடும்.

​சன் ஸ்ட்ரோக்

  • தமிழ் நாட்டை பொறுத்தவரை வெயிலுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. அதிலும் கோடைக்காலத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும் போது நாம் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.
  • குறிப்பாக குழந்தைகள் வெளியில் விளையாடும் போது உடலில் நீரிழப்பு ஏற்படுவதோடு அதிகப்படியான வெப்பம் இணைந்து சன் ஸ்ட்ரோக் உண்டாகிறது.
  • சன்ஸ்ட்ரோக் மூளை செல்களை சேதப்படுத்த கூடிய நோயாகும். இது மிகவும் ஆபத்து நிறைந்தது. இது வயதானவர்களை அதிகம் தாக்க கூடியது என்றாலும் ஒரு சில குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் முன்னெச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது.
  • அதிகப்படியான வெயில் நேரத்தில் குழந்தைகளை வெளியே விட கூடாது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் அனுப்ப வேண்டாம்.
  • வெளியில் செல்லும் போது தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லயும். ஆடைகள் இறுக்கமில்லாமல் தளர்வாக பருத்தி ஆடைகளை மட்டும் அணியவேண்டும்.

​நீரிழப்பு அபாயம்

  • நீரிழப்பு பெரியவர்களுக்கு தான் உண்டாகும் என்று நினைத்து இருப்போம். இந்த நீரிழப்பு குழந்தைகளுக்கும் வரக்கூடிய பிரச்சனை தான். கோடைக்காலங்களில் உடலில் வியர்வை அதிகமாக இருக்கும்.
  • வியர்வை போலவே சிறுநீர் வழியாகவும் உடலில் இருக்கும் திரவம் இழப்பு அதிகமாக இருக்கும். அதிலும் இயல்பாகவே சிறுவர்கள் போதுமான தண்ணீர் குடிப்பதில்லை.
  • இந்நிலையில் உடலில் நீரிழப்பு என்பது அதிகமாகவே காணப்படும். அதோடு விளையாடுவதால் வியர்வையும் அதிகமாக வெளியேறும்.
  • குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் போது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வந்தால் அவர்களுக்கு நீர்ச்சத்து பற்றாக்குறை இருக்கு என்பதை தெரிந்துகொள்ளவும். முடிந்தவரை குழந்தைகளுக்கு போதுமான அளவு நீர் கொடுக்கவும்.
  • உடலின் திரவ ஆகாரமான நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், இளநீர் ஆகியவை சரியான இடைவெளியில் கொடுப்பதன் மூலம் நீரிழப்பு அபாயத்தை தடுக்கலாம்.

​உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள்

  • பொதுவாக மழைக்காலங்களில் தான் நீரில் பரவும் நோய்கள் அதிகமாக வரும் என்று இருப்போம் . ஆனால் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் கோடை காலங்களிலும் வரும்.
  • குழந்தைகள் சுகாதாரமற்ற நிலையில் தெருவோரங்களில் சாப்பிடும் போது இந்த நோய்கள் வர வாய்ப்புள்ளது. உணவு வழியாக குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைபாடு அதிகம் உண்டாகும்.
  • வெப்பமான நேரத்திலும் மற்றும் ஈரமான சூழலிலும் பாக்டீரியாக்கள் செழித்து வளரகூடியது . இதனால் உணவு நச்சு மற்றும் உணவு தொற்று காரணமாக நோய் உண்டாவது கோடைக்காலத்தில் அதிகமாக இருக்கும் என்பதால் வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்த்து கொள்ளலாம்.

​​ஃபுட் பாய்ஸன்

  • ஃபுட் பாய்ஸன் என்பது வெயில் காலங்களில் பரவும் மற்றொரு நோய் ஆகும். இது அசுத்தமான உணவு தண்ணீரின் மூலம் பரவக்கூடும். வீட்டிலும் சில சமயங்களில் சுகாதாரம் இல்லாமல் கவனக்குறைவாக சமைக்கும் போது அந்த உணவு ஃபுட் பாய்ஸனாக மாறிவிடும்.எனவே வீட்டில் உணவு தயாரிக்கும் போது கவனம் தேவை.
  • இந்த நோய், வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிறு வலி போன்ற உபாதைகளை குழந்தைகளுக்கு உருவாக்கிவிடும். குழந்தைகளுக்கு கண்ட நேரத்தில் உணவு கொடுக்காமல் சரியான நேரத்தில் சரியான சுகாதாரமான முறையில் தயாரித்த உணவை கொடுப்பதன் மூலம் கோடை நோயை பெருமளவு குறைத்துவிடலாம்.
0 Shares:
You May Also Like
Read More

மூச்சு பிடிப்பு | Moochu Pidippu

மூச்சு பிடிப்பு காரணம்: பெரும்பாலும் அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதன் மூலமாக இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. அதேபோல் அஜீரணம் சம்மந்தமான பிரச்சனை…
பாட்டி வைத்தியம்
Read More

பாட்டி வைத்தியம்

நம் பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் விஷயங்களை வேலை செய்யும் வயதில் வளர்ந்தவர்கள் என்பது இரகசியமல்ல. பேபி பூமர்கள் மத்தியில், ஆமணக்கு எண்ணெய் உழைப்பைத் தூண்டும்…
Read More

பூச்சி கடிக்கு வீட்டு வைத்தியங்கள்

தேனீகள், குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்ற சிறிய பூச்சிகள் நம்மை கடித்தால் கூட நச்சுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்கள் மனிதர்களின் சருமத்தில் அழற்சியை…
Read More

ஆலிவ் ஆயில் பயன்கள், பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

ஆலிவ் ஆயில் ஒரு மிகப் பயனுள்ள எண்ணெய் ஆகும். இது ஒரு மருந்து ஆகியவை அல்லது சுற்றுச்சூழல் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதில் உள்ள அதிகமான…
மூலிகை செடிகள்
Read More

மூலிகை செடிகள் mooligai chedigal in tamil

பழங்காலத்திலிருந்தே, மனிதர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு வகையான தாவரங்களைப் பயன்படுத்துகின்றனர். மருத்துவ தாவரங்கள் பெரும்பாலும் காடுகளில் உள்ளன. சில சமயங்களில் அவையும் வளர்க்கப்படுகின்றன.…