- அஜித்தின் ’வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை இன்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் போனி கபூருக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
- ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றிக்குப்பிறகு போனி கபூர், அஜித்,ஹெச்.வினோத் கூட்டணி மறுபடியும் ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளார்கள்.
- அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
- மேலும் இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் 50-வது பிறந்தநாள் மே 1 ஆம் தேதி ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் மிகுந்து இருக்கிறார்கள்.
- நேர் கொண்ட பார்வை படம் இயக்குநர் வினோத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. அதைத் தொடர்ந்து ‘வலிமை’ படத்தையும் எச். வினோத் இயக்கியுள்ளார்.
- வலிமை படத்தில் அஜித் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம். போலீஸ் கேரக்டருக்காக வெயிட்டை குறைத்துள்ளாராம் அஜித். இந்த படத்தில் அஜித் பெயர், அர்ஜுன் எனவும் கூறப்படுகிறது.
- இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் வகையில் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளாராம் யுவன்.மேலும் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை இந்த படத்திற்கு எழுதி உள்ளாராம்.
- இந்த பாடல் ‘ஆலுமா டோலுமா’ பாடலைப் போலவே இந்த ஆண்டின் தெறிக்கும் பாடலாக இருக்கும் என கூறுகிறார்கள்.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

