அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்காக இன்று முதல் 200 பேருந்துகள் இயக்கம்

- Advertisement -

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று முதல் 24 ஆம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு செல்வோருக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் விநியோகம்
போன்ற பணிகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது. அரசின் முக்கிய துறைகளில் குறைத்த பணியாளர்கள் பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

தலைமை செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சென்னை பெருநகர் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களுடைய பணிகளுக்கு வந்து செல்ல தமிழக அரசு சென்னையில் உள்ள முகிய வழித்தடங்களில் 200 பேருந்துகளை இயக்க முடிவு செய்து உள்ளது.

- Advertisement -

பயணம் செய்யும் போது அரசு விதித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், கிருமி நசுனி உபயோகித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox