உலகமெங்கும் புதுப் புது நோய்கள் உருவாகி கொண்டு வருகின்றன. சித்த மருத்துவம் ஆயுர்வேதம் போன்றவற்றை மேலை நாட்டவர்கள் நம் நாட்டை நோக்கி வருகின்றன ஆனால் நமது மக்கள் ரசாயனம் கலந்த ஆங்கில மருந்துகளை நாடுகின்றனர்.
நமது இந்திய’ மூலிகை சுரங்கம் ‘என்று சொன்னால் அது மிகையாகாது.
நம் நாட்டில் வளரும் நம் உயிரைக் காக்கும் ஒன்றுதான் ‘அதிமதுரம்’ இதன் பல்வேறு பயன்களை இங்கே காண்போம்.
தலைமுடி
சிறிது அதிமதுரத்தை எடுத்து தூய்மையான பசும்பாலில் ஊறவைத்து பிறகு அதை அரைத்து தலையில் நன்கு ஊறும் வகையில் அழுத்தி தேய்த்து. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது தடுக்கும் தலையில் உள்ள சிறு புண்கள் ஆறும். இளநரையை நீக்கும். முடி பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.
மலட்டுத்தன்மை
ஆண் பெண் இரு பாலருக்கும் மலட்டுத்தன்மை நீங்க அதிமதுரம் உதவுகிறது இந்த அதிமதுரப் பொடியை பசும்பாலுடன் கலக்கி அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு நரம்பு வலிமை பெறும்.
பெண்களுக்கு கர்ப்பப்பையில் இருக்கும் குறைகளைப் போக்கி சீக்கிரத்தில் கருவுற செய்யும்.
கல்லீரல்
அதிமதுரம் சற்று திரவத் தன்மை வாய்ந்ததா மருத்துவ மூலிகை என்பதால் அது கிருமி அழிக்கக்கூடிய சக்தி உடையது.
அதிமதுரத்தை அவ்வப்போது சிறிது சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெறும்.
உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மை வெளியேற்றும். ரத்தத்தில் நோய் எதிர்ப்பு தன்மையை மேம்படுத்தும்.
தொண்டை
அது மதத்தை சிறிதளவு எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் இதனால் அதிகளவு உமிழ்நீர் சுரக்கும். இந்த உண்மை நீரானது சிறிதுசிறிதாக தொண்டைக்குள் இறங்கும் சளித்தொல்லையால் ஏற்படும் தொண்டை கரகரப்பு நீக்கும்.
சளித்தொல்லை ஏற்படும் தொண்டை கட்டியையும் சீக்கிரத்தில் குணப்படுத்தும்.
சிறுநீரகம்
நமது உடலில் சிறுநீரகம் ஆரோக்கியமாய் இருப்பது மிக அவசியம். ஒருசிலருக்கு சிறுநீரக சுற்று நோயாலும் சிறுநீரகப் பையில் புண்கள் ஏற்படுகின்றது.
அதிமதுரத்தை நீர் ஊற வைத்து அவ்வப்போது குடித்து வந்தால் சிறுநீரக புண்கள் ஆறும். சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்கும்.
சுகப்பிரசவம்
பத்து மாதம் வரை குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றெடுக்க என்பது விரும்புவர்.
அதிமதுரம் மற்றும் தேவதாரம் மூலிகைப் பொருட்களை வகைக்கு 40 கிராம் எடுத்துக்கொண்டு நன்கு பொடி செய்து சிறிதளவு சுடுநீரில் போட்டு கலந்து பிரசவ வலி ஏற்படும் பெண்களுக்கு வலி உண்டானத்திலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
மூட்டுவலி பிரச்சினை
அதிமதுர கலந்த நீரை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் பருகி வந்தால் மூட்டுவலி குணமாகும்.
உடலில் வாத தன்மை அதிகரிப்பதே கட்டுக்குள் கொண்டுவரும்.
வயிறு
பலரும் காலையில் சரியாக சாப்பிடுவதனால் வயிற்று மற்றும் குடலில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
அதிமதுரப் பொடியை இரவில் நீரில் கலந்து ஊற வைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் தண்ணீரை சேர்த்து பருகி வந்தால் வயிற்று மற்றும் குடலில் ஏற்படும் அல்சர் புண்களை குணமாக்கும்.
எனவே அதிமதுரத்தை சாப்பிட்டு அனைவரும் நன்மை பெறுவோம்