Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

Blood clot

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதித்தவர்கள் அல்லது ஏற்கெனவே இரத்த உறைதலால் பாதிக்கப்படவர்கள் சமீப காலமாக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இரத்த உறைதலால் பல இறப்புகளையும் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். எனவே இந்த இரத்த உறைதல் என்றால் என்ன..? இது எவ்வாறு உண்டாகிறது என்பதை பார்ப்போம். இரத்தம் உறைதல்: அதிகப்படியான இரத்தப்போக்கு அல்லது காயம் ஏற்பட்ட பகுதியில் இரத்த இழப்பை கட்டுப்படுத்துவதை தான் இரத்தம் உறைதல் என்கிறோம். அதாவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அந்த பகுதியில் இரத்தக் கட்டிகள் உருவாகி இரத்தப்போக்கை நிறுத்திவிடும் இதை தான் இரத்தம் உறைதல் என்கிறோம். இரத்தம் உறைதல் நம் உடலில் ஏற்படும் அதிகளவு இரத்தப்போக்கை தடுக்கும். காயம் உள்ள இடத்திற்கு முறையான சிகிச்சை அளித்தபின் இரத்தக் கட்டிகள் உடைந்து இரத்த…

Read More

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதனை அடுத்து, தமிழக அரசு சில அரசு துறைகளின் பெயரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது மாற்றி அமைக்கப்பட்ட பெயர்களை தமிழக அரசு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, இது தொடர்பான அரசாணையை தலைமை செயலாளர் வெ.இறையன்பு தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை என்ற பெயரை மனிதவள மேலாண்மை துறை என்று மாற்றப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை என்ற பெயரை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை என்ற பெயரை கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை என்ற பெயரை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை என்ற பெயரை தொழிலாளர் நலன்…

Read More

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 7) முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புகள் உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. மேலும் சென்னையை பொறுத்த வரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read More

Chennai Kalakshetra Foundation அதிகாரபூர்வ இணையதளத்தில் Manager, Foreman, Accountant & Superintendent, Semi Skilled Worker ஆகிய பணியிடங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித்தகுதி 8th/ 10th/ B.Com/ MA/ M.Sc./ M.Com/ Any Degree என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பணியிடமாக சென்னை (Chennai – Tamilnadu) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Chennai Kalakshetra Foundation (சென்னை காளக்ஷேத்ரா அறக்கட்டளை) பணியின் பெயர் : Manager, Foreman, Accountant & Superintendent, Semi Skilled Worker கல்வித்தகுதி : 8th/ 10th/ B.Com/ MA/ M.Sc./ M.Com/ Any Degree பணியிடம் : Chennai – Tamilnadu தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் (Interview) விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்…

Read More

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்று மருத்துவர்களிடையே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளில் கோவிஷீல்டானது அதிக அளவில் நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கி உள்ளது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2021 ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 515 மருத்துவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்திய ஆய்வில், ஒரு மருத்துவருக்கு கூட பெரிய அளவில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த இரண்டு தடுப்பூசிககளை இரண்டு முறை செலுத்தி கொண்ட பிறகு, அவர்களின்…

Read More

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வி தகுதி B.Sc Nursing படித்து முடித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள். மொத்த காலி பணியிடங்கள் – 50 பணியின் பெயர்: Staff Nurse விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.06.2021 கல்வித் தகுதி: B.Sc Nursing வயது வரம்பு: 22 வயது முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும் மாதச் சம்பளம்: ரூ.65,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (interview) மேலும் முழுவிவரங்களை தெரிந்துக் கொள்ள https://www.omcmanpower.com/jobInfo.php?jid=204 இந்த pdf லிங்கை கிளிக் செய்யவும்.

Read More

நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு தான் வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயித்து வருகிறது. அதன்படி, விடுமுறை நாளான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 24 காசுகள் உயர்ந்து ரூ. 96.23க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை இன்று 26 காசுகள் உயர்ந்து ரூ. 90.38 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read More

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதை குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கருத்து தெரிவிக்க ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் இது தொடர்ப்பாக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரநிதிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அனைத்து தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்ட பிறகு, இது குறித்த அறிக்கையை ஒன்றை தயார் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அறிக்கையை…

Read More

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3557 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மாற்றப்பட்டுள்ளது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு நீதி துறையில் ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant,Gardener, Sanitary worker, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Office Assistant, Sweeper cum Cleaner ஆகிய பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, 2021 ஏப்ரல் 18–ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த அரசு வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது 09.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் ததேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : Tamilnadu Court பணியின் பெயர்…

Read More

கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த, தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளை மறுதினம் காலையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 7-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில், கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளும் கட்டுப்பாடுகளும்: கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில், கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்காகவும், பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை…

Read More

இந்த கொரோனா காலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்தால், நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த சீரக தேநீர் பானம் எப்படி செய்வது என்பதை பார்ப்போம். ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதி நிலைக்கு வந்தவுடன் அதில், பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி, சீரகம் 1/2 தேக்கரண்டி, இஞ்சி 1/2 அங்குலம் சேர்த்து மூடி போட்டு 8 அல்லது 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். பின்னர், இதை வடிகட்டி, அதில் சுவைக்கு ஏற்ப தேன் கலக்கவும். இப்போது சூடான சுவையான சீரக தேநீர் தயார். இந்த தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால்…

Read More

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் இரு வாரங்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7 -ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவக் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா நோய் தொற்று பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவக் குழு பரிந்துரையின் அடிப்படையில், முழுஊரடங்கு…

Read More

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட 70 வயது மூதாட்டி ஒருவர், வீட்டிற்கு உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் முத்யால கட்டய்யா. இவரது மனைவி கிரிஜம்மா கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மே 12ஆம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் யாரும் தங்க அனுமதிக்கப்படாத நிலையில், மூன்று நாள்களுக்குப் பிறகு, மே 15ம் தேதி கிரிஜம்மாவை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற அவரது கணவர், படுக்கையில் தன் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கார். அங்கு உள்ள மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டதற்கு, வேறு வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது பிணவறையில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர். மனைவியை மருத்துவமனை முழுவதும் தேடி எங்கும் கிடைக்காததால், இறுதியாக பிணவறைக்கு சென்று இருக்கிறார். அங்கு, அவரது மனைவியைப் போன்ற ஒரு உடலை பார்த்து அடையாளம் காட்டிய அவரிடம், கிரிஜம்மா இறந்துவிட்டதை உறுதி செய்து,…

Read More

BEL கம்பெனியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Apprenticeship காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான கல்வித்தகுதி 10th / SSLC தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக பெங்களுர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். நிறுவனம் : Bharat Electronics Limited பணியின் பெயர் : Apprenticeship கல்வித் தகுதி : 10th / SSLC பணியிடம் : BENGALURU தேர்வு செய்யப்படும் முறை : Interview விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2021 இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் முழு விவரங்களை : https://drive.google.com/file/d/1MmrXev0_c-gKPKaV-ki01afFa3qip1c4/view?usp=sharing. https://bel-india.in/Documentviews.aspx?fileName=STA-Advt-Eng-Kan-31-05-21.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Read More