Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

மத்திய அரசின் இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் (Spices Board of India) பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இதற்கான கல்வித்தகுதியும் , விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் பதவியின் பெயர் : Technical Analyst (Chemistry, Microbiology) காலி பணியிடங்கள் : 06 கல்வித்தகுதி : முதுகலை பட்டம் மாதச் சம்பளம் : ரூ.30,000/- வயது வரம்பு : 35 years பணியிடம் : கேரளா, கொச்சி தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பதவியின் பெயர் : Sample Receipt Desk Trainee, Technical Analyst, Trainee Analyst காலி பணியிடங்கள் : 12 கல்வித்தகுதி : பட்டப்படிப்பு, முதுகலை பட்டம் மாதச் சம்பளம் : ரூ.17,000 -30,000 வயது வரம்பு : 25- 35 years பணியிடம் : Chennai, Kolkata, Mumbai,…

Read More

நெற்றிக்கண் படத்திலிருந்து பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அப்டேட் கொடுத்துள்ளார். நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு எப்பொழுதும் தனி மவுசு தான். 2011 ஆண்டு கொரிய மொழியில் வெளியான ‘ப்ளைண்ட்’ எனும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். இதை ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தை மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்கியுள்ளார். கண் பார்வை இல்லாத ஒரு…

Read More

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் கர்நாடக மாநிலத்தில் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு காரணமாக தினசரி கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதற்கு முன் 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1 வயது முதல் 9 வயது வரை உள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் 9 வயது முதல் 19 வயது வரை உள்ள 1 லட்சம் பேரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை அடுத்த சில மாதங்களில் வரும் என்றும், இதில் குழந்தைகள்…

Read More

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள அனைத்து சத்துக்களையும் நாம் முழுமையாக பெற முடியும். கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது. கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்- ஏ வாக மாற்றம் அடைகிறது. இது கண் பார்வையை தெளிவாக்குகிறது. மேலும் வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வராமல் இருக்கும். இதற்கு காரணம் விட்டமின் ஏ தான். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ளலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவாக எடுத்து கொள்ள வேண்டும். மேலும் கேரட்டில் நிறைந்து காணப்படும் பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ஒரு கேரட் தினமும் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கலாம். இதன் மூலம்…

Read More

கொரோனா தடுப்பூசி முதல் டோஸாக கோவிஷீல்டும், இரண்டாவது டோஸாக கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் கவலைப்பட தேவையில்லை என்கிறார் இந்திய அரசின் தலைமை கோவிட் 19 ஆலோசகர் டாக்டர் வி.கே.பால். இது குறித்து இந்தியாவின் கோவிட் -19 ஆலோசகர் டாக்டர் வி.கே.பால் பேசியாதாவது, மக்கள் முதல் டோஸாக எந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்களோ அதே தடுப்பூசியைத்தான் இரண்டாவது டோஸாகவும் செலுத்திக்கொள்ள வேண்டும். தவறுதலாக மக்கள் வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டு இருந்தாலும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் சித்தார்த்நகர் மாவட்டத்திலுள்ள பத்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 கிராமவாசிகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பிறகு , அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது டோஸாக செலுத்தப்பட்டுள்ளது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று மக்கள் அச்சம் அடைந்தர்கள். இந்நிலையில் ‘கலவையான’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தி…

Read More

கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட வில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து இருக்கிறது. கொரோனா காலத்திலும் ரிசர்வ் வங்கி 2020-21-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை நேற்று வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில் கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த 2020 – 2021 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்படவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. ஏனெனில் இதுவரை கணக்கெடுத்த மொத்த மதிப்பீட்டின் அடிப்படையில், 2020 மார்ச் 31 நிலவரப்படி, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளில் 83.4% புழக்கத்தில் இருந்தது. இது, 2021 மார்ச்சில் 85.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணமதிப்பு அடிப்படையில், மார்ச் 2020 ஆம் ஆண்டு 5.48 லட்சம் கோடியாக இருந்த 2,000 நோட்டு புழக்கம், மார்ச் 2021ஆம் ஆண்டில் 4.9 லட்சம் கோடியாக சரிந்து இருக்கிறது. எக்காரணத்துக்காக…

Read More

இந்தியாவில் கொரோனோவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனோவின் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், மக்கள் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், மருந்து வாங்கும்போது நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும். நாம் முடிந்தவரை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. நம் உடலில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கு நாம் மருத்துவரிடம் செல்வதில்லை. மருந்துக் கடைக்குச் சென்று உடலில் உள்ள பிரச்சனையைச் சொல்லி மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம் இவ்வாறு செய்வது தவறு. மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பின்னர் மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்ளுங்கள். கொரோனா சமயத்தில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சு பிரச்சினை, உடல் சோர்வு, பசியின்மை, செரிமான பிரச்சினை போன்ற அறிகுறிகள் தோன்றினால் எது கொரோனா தொற்று நோய், எது சாதாரண பிரச்சினை என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். மாறிக்கொண்டு வரும் உணவுமுறையாலும், வாழ்க்கைமுறையாலும் நம்மில் பலருக்கு…

Read More

இந்தியாவில் கருப்பு, வெள்ளை பூஞ்சை அடுத்து தற்போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மஞ்சை பூஞ்சை பரவி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது மக்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை அடுத்து தற்போது மஞ்சள் நிறப் பூஞ்சை ஒன்று இந்தியாவில் பரவி வருவதாகவும், இந்த பூஞ்சை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிரினங்களிடம் மட்டுமே மஞ்சள் பூஞ்சை காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவு பொருட்கள் மூலம் இந்த மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. பூஞ்சை தடுப்பு மருந்துகளினால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டெராய்டை அதிகமாக பயன்படுத்தினால் இந்நோய் தொற்று…

Read More

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தற்போது முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதங்களில் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை மே 31ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான கால அவகாசம் ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வெளியிட்டுள்ள அறிக்கையில் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் மே 31ம் தேதி வரை இருந்தது. தற்போது இதற்கான கால அவகாசம் ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். 2021 ஆண்டு ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு தாமதக்கட்டணத்துடன், மின் துண்டிப்பின்றி காலநீட்டிப்பு…

Read More

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்தது. மேலும் அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்து இருந்தது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்கத் தயார் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமித்து, அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதன் மூலம் புகார் அளித்தல், ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை கண்காணித்தல், இணக்க அறிக்கை மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை நீக்குதல் ஆகியவற்றை செய்ய மத்திய அரசு நோக்கமாக கொண்டு உள்ளது. மத்திய அரசின் இந்த புதிய…

Read More

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை நோய் தொற்று ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு பூஞ்சை நோய் தொற்றை தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்துவது போன்றவற்றால் கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் அதிக அளவு ஸ்டிராய்டு மருந்தை பயன்படுத்துவது, சுத்தப்படுத்தாமல் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது, ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்துவது, படுக்கையை நீண்ட காலம் பயன்படுத்துவது போன்றவற்றால் இவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் 11,517 பேர் கறுப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு கண்றியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் 236 பேர் கறுப்பு பூஞ்சை நோய் தொற்றால்…

Read More

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 3.11 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள். கொரோனாவால் உறவினர்களையும் பெற்றோர்களையும் இழந்து மக்கள் பரிதவிப்பது நெஞ்சை பதற வைக்கிறது. இந்த நிலையில், நாட்டில் கொரோனாவால் 577 குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகி இருக்கிறார்கள் என்ற தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் முன்வந்து இருக்கிறது. தற்போது அனைத்துக் குழந்தைகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் அவர்களது தேவைகள் ஆராயப்பட்டு, அவர்களது பாதுகாப்பும், நலமும் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 577 குழந்தைகள் குறித்த தகவல்கள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. இதுபோல் பதிவாகாத தகவல்கள் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தகவல் கிடைத்துள்ள…

Read More

ஹைலைட்ஸ்: கொய்யா கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. கொய்யா குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொய்யா இலையில் தேநீர் தயாரித்து குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். கொய்யாப்பழத்தில் ‘வைட்டமின் சி’ அதிக அளவு உள்ளது. ஆரஞ்சுபழத்தில் உள்ள வைட்டமின் சி அளவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. நாம் எல்லோரும் விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்று கொய்யா. இது மிகவும் சுவையான பழம். கொய்யாப்பழம் விலை மலிவாகவும், மிக எளிதாகவும் கிடைக்க கூடியது. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கொய்யாபழம் மட்டுமல்ல, அதன் இலைகளும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கும். மேலும் நம் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்த கொய்யாப்பழம் மிகவும் உதவி புரிகிறது. கொய்யாவில் தான் ஆரஞ்சைவிட 4 மடங்கு அதிக விட்டமின் சி உள்ளது. கொய்யாவின் சில அற்புதமான…

Read More

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்று தீவிரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது உள்ள முழு ஊரடங்கு காரணமாக தொற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது. மேலும் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்து பணி தொடங்கிப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுப்பட்டுள்ள 18-44 வயதினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். தடுப்பூசி குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலம் முழுவதும் ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி…

Read More