இந்திய ராணுவத்தில் ( Indian Army) அதிகாரபூர்வ இணையதளத்தில் காலி பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் மருத்துவத்தேர்வு (Medical Examination) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நிறுவனம் : Join Indian Army மொத்த காலிப்பணியிடம் : 189 பணியின் பெயர் : SSC(Tech)-57 Men, SSC(Tech)-28 Women கல்வித் தகுதி : Engineering Degree பணியிடம் : Tamilnadu தேர்வு செய்யப்படும் முறை : மருத்துவத்தேர்வு (Medical Examination) மாதச் சம்பளம் : ரூ. 56,100 – ரூ. 1,77,500 விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.06.2021 இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்களை https://drive.google.com/file/d/1C5LJ7tYQ-yLkhBXFnmosaY-W7WmqokJS/view?usp=sharing என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.
Author: gpkumar
இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நோயினால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 17ஆம் தேதி 2டிஜி என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. மேலும் இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து, மருந்து பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டு பிடிக்கப்பட்டது. 2DG கொரோனா தடுப்பு மருந்து தண்ணீரில் கலந்து குடிக்க கூடியது. இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2டிஜி கொரோனா மருந்தின் விலை ரூ.990 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்தினை யாரெல்லாம்…
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குகடங்காமல் பரவி வந்தது. இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள். இதற்காக தமிழக அரசு பல இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை திறந்து வைத்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளை மூன்று வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் இருப்பதற்கான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானவர்களுக்கு, ஆக்சிஜன் அளவு 94 ஆக இருந்தால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என்றும், வீடுகளிலேயே அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள பரிந்துரை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழாக 90-க்குள் இருந்தால், அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை…
ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலகின் 193 ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளில் புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை தடுக்கும் நோக்குடன், 1987ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் புகையிலை எதிர்ப்பு நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துகிறோம் என உறுதிமொழி எடுப்பதன் நோக்கமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா கோராதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், “புகைபிடிப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் இவர்கள் உயிரிழப்பதற்கு 50% வாய்ப்புகள் உள்ளது” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஆதனோம் தெரிவித்து இருக்கிறார். கொரோனாவால் ஏற்படும் ஆபத்தை குறைக்க புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது எனக் கூறும் அவர், புகைப்பிடிப்பதனால் ஏற்படும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்ககளையும், இதய நோய்களையும் தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும்…
கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தார்கள். மேலும் இந்நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான பண வசதி இல்லாமல் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் இந்நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்காக பொதுத்துறை வங்கிகள் கடன் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. அதன்படி, கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை தனிநபர்கடன் வழங்கப்படும் என்று பொதுத்துறை வங்கிகள் அறிவித்து இருக்கிறது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கொரோனா சிகிச்சைக்காக 5 லட்சம் வரை பிணையற்ற (ஜாமீன் அல்லது சொத்து இல்லாவிட்டாலும்) கடன்களை வழங்க தயாராக உள்ளது. மேலும் இக்கடனை திருப்பிச் செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் கொடுப்பதாக வங்கிகள் தெரிவித்து இருக்கிறது. எஸ்பிஐ வங்கி மட்டும் கடன் தொகைக்கான…
கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு இடையே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஞாயிற்றுக்கிழமை கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை அல்லாத இடங்களிலிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான வரம்புகளை அதிகரித்து இருக்கிறது. கொரோனா நோய் தொற்று பரவல் சமயத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், எஸ்பிஐ (SBI) செக் புக் அல்லது படிவத்தின் மூலம் கணக்கு இல்லாத எஸ்பிஐ கிளைகளில் இருந்து பணத்தை எடுப்பததற்கான வரம்புகளை அதிகரித்துள்ளது” என்று எஸ்பிஐ வங்கி ட்வீட்டர் செய்துள்ளது. எஸ்பிஐ பணத்தை திரும்பப் பெறும் வழிகாட்டு விதிமுறைகள்: சேமிப்பு வங்கி பாஸ் புக் உடன் Self என்ற வகையில் மூலம் பணத்தை எடுத்தல் (படிவத்தைப் பயன்படுத்தி) ஒரு நாளைக்கு ரூ.25,000 ஆக மாற்றப்பட்டுள்ளது. Self காசோலை மூலம் பணத்தை (செக்கை பயன்படுத்தி) எடுத்தல் ரூ.1 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பினரால் பணத்தைத் (காசோலையைப் பயன்படுத்தி மட்டுமே) திரும்பப் பெறுவது ரூ.50,000 ஆக திருத்தப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு வேகம் சற்று குறைந்துள்ளது. ஆனால் கோவையில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையவில்லை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு நடத்தினார். கொரோனா வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்கள் அணியும் கவச உடை (பிபிஇ கிட் ) அணிந்து நோயாளிகளை நலம் விசாரித்தார். கடந்த சில தினங்களாக சென்னையை காட்டிலும், கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். அங்கு கொரோனா சிகிச்சைக்காக கூடுதல்படுக்கை வசதிகளை திறந்து வைத்தார். மேலும் தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான பணி உத்தரவுகளையும் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆய்வு…
கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்தத் தொகை வட்டியோடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணமாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்றும், அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் அல்லது உறவினரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000 உதவி தொகை வழங்கப்படும் என்றும், அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை இந்த தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம்…
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை அலுவலகங்களில் காலியாக உள்ள மேலாளர், உதவி கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்விதகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர் : AI Airport Service Limited மொத்த காலிபணியிடங்கள்: 15 பணியின் பெயர் : Manager-Finance – 04 மாதச் சம்பளம்: ரூ.50,000 பணியிடம்: சென்னை, தில்லி, கொல்கத்தா கல்வித்தகுதி: Chartered Accountant தேர்ச்சி அல்லது Cost Accountant -இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர் : Officer-Accounts – 07 மாதச் சம்பளம்: ரூ.32,200 பணியிடம்: சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை கல்வித் தகுதி: Inter Chartered Accountant, Inter Cost and Management Accountancy அல்லது MBA (Finance) போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர் : Assistant Accounts…
மத்திய அரசின் இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் (Spices Board of India) பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இதற்கான கல்வித்தகுதியும் , விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் பதவியின் பெயர் : Technical Analyst (Chemistry, Microbiology) காலி பணியிடங்கள் : 06 கல்வித்தகுதி : முதுகலை பட்டம் மாதச் சம்பளம் : ரூ.30,000/- வயது வரம்பு : 35 years பணியிடம் : கேரளா, கொச்சி தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பதவியின் பெயர் : Sample Receipt Desk Trainee, Technical Analyst, Trainee Analyst காலி பணியிடங்கள் : 12 கல்வித்தகுதி : பட்டப்படிப்பு, முதுகலை பட்டம் மாதச் சம்பளம் : ரூ.17,000 -30,000 வயது வரம்பு : 25- 35 years பணியிடம் : Chennai, Kolkata, Mumbai,…
நெற்றிக்கண் படத்திலிருந்து பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அப்டேட் கொடுத்துள்ளார். நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு எப்பொழுதும் தனி மவுசு தான். 2011 ஆண்டு கொரிய மொழியில் வெளியான ‘ப்ளைண்ட்’ எனும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். இதை ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தை மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்கியுள்ளார். கண் பார்வை இல்லாத ஒரு…
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் கர்நாடக மாநிலத்தில் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு காரணமாக தினசரி கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதற்கு முன் 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1 வயது முதல் 9 வயது வரை உள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் 9 வயது முதல் 19 வயது வரை உள்ள 1 லட்சம் பேரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை அடுத்த சில மாதங்களில் வரும் என்றும், இதில் குழந்தைகள்…
கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள அனைத்து சத்துக்களையும் நாம் முழுமையாக பெற முடியும். கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது. கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்- ஏ வாக மாற்றம் அடைகிறது. இது கண் பார்வையை தெளிவாக்குகிறது. மேலும் வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வராமல் இருக்கும். இதற்கு காரணம் விட்டமின் ஏ தான். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ளலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவாக எடுத்து கொள்ள வேண்டும். மேலும் கேரட்டில் நிறைந்து காணப்படும் பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ஒரு கேரட் தினமும் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கலாம். இதன் மூலம்…
கொரோனா தடுப்பூசி முதல் டோஸாக கோவிஷீல்டும், இரண்டாவது டோஸாக கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் கவலைப்பட தேவையில்லை என்கிறார் இந்திய அரசின் தலைமை கோவிட் 19 ஆலோசகர் டாக்டர் வி.கே.பால். இது குறித்து இந்தியாவின் கோவிட் -19 ஆலோசகர் டாக்டர் வி.கே.பால் பேசியாதாவது, மக்கள் முதல் டோஸாக எந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்களோ அதே தடுப்பூசியைத்தான் இரண்டாவது டோஸாகவும் செலுத்திக்கொள்ள வேண்டும். தவறுதலாக மக்கள் வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டு இருந்தாலும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் சித்தார்த்நகர் மாவட்டத்திலுள்ள பத்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 கிராமவாசிகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பிறகு , அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது டோஸாக செலுத்தப்பட்டுள்ளது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று மக்கள் அச்சம் அடைந்தர்கள். இந்நிலையில் ‘கலவையான’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தி…
