Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களில் மூவரை தேர்வு செய்து ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய மற்றும் மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் அல்லது விரும்பும் மாவட்டத்தில் கனவு இல்லம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read More

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை ஒட்டி, கொரோனா நிவாரணம் இரண்டாவது தவணை ரூ.2,000, 14 வகையான மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட 5 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கொரோனா நிவாரணத் தொகை இரண்டாவது தவணை ரூ.2 ஆயிரத்துடன், 14 வகை மளிகைப் பொருள்களான கோதுமை மாவு, ரவை தலா 1 கிலோ, சா்க்கரை, உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ, புளி, உப்பு, கடலை பருப்பு தலா கால் கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா 100 கிராம், டீதூள் 100 கிராம் பொட்டலம் 2, துணி சோப்பு, குளியல் சோப்பு தலா 1 ஆகிய பொருட்கள் அடங்கிய பைகளை, அரிசி அட்டைதாரா்களுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’…

Read More

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 18 சுகாதார ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வி தகுதி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும், உடல்நலம் மற்றும் சுகாதார பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விளம்பர எண்.03/2021 நிறுவனம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பணியிடம்: நெய்வேலி, தமிழ்நாடு பணியின் பெயர் : சுகாதார ஆய்வாளர் மாதச் சம்பளம்: ரூ.38,000 வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 18 கல்வித் தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் உடல்நலம் மற்றும் சுகாதார பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள்…

Read More

இந்தியா முழுவதும் கொரனோ வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு பிரதமர் மோடி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார். மேலும் மாணவர்களின் உடல் நலமும், பாதுகாப்பும் முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்ப்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த ஆலோசனையில், அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் கேட்ட பின்னர், 2 நாட்களில் முடிவு எடுக்கலாம் என தெரிவித்து இருக்கிறார். மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு 2 நாட்களில் இது குறித்து முடிவை முதல்வர் ஸ்டாலின்…

Read More

நாட்டில் கடந்த 5-நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 45 நாட்களுக்கு பிறகு இன்று 20 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அதன்படி, 17,93,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 நாட்களாக நாட்டில் கொரோனா தொற்று 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 3,207 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,35,102-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 20-வது நாளாக, தினசரி புதிய பாதிப்புகளைவிட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 மணி…

Read More

இந்திய ராணுவத்தில் ( Indian Army) அதிகாரபூர்வ இணையதளத்தில் காலி பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் மருத்துவத்தேர்வு (Medical Examination) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நிறுவனம் : Join Indian Army மொத்த காலிப்பணியிடம் : 189 பணியின் பெயர் : SSC(Tech)-57 Men, SSC(Tech)-28 Women கல்வித் தகுதி : Engineering Degree பணியிடம் : Tamilnadu தேர்வு செய்யப்படும் முறை : மருத்துவத்தேர்வு (Medical Examination) மாதச் சம்பளம் : ரூ. 56,100 – ரூ. 1,77,500 விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.06.2021 இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்களை https://drive.google.com/file/d/1C5LJ7tYQ-yLkhBXFnmosaY-W7WmqokJS/view?usp=sharing என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

Read More

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நோயினால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 17ஆம் தேதி 2டிஜி என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. மேலும் இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து, மருந்து பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டு பிடிக்கப்பட்டது. 2DG கொரோனா தடுப்பு மருந்து தண்ணீரில் கலந்து குடிக்க கூடியது. இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2டிஜி கொரோனா மருந்தின் விலை ரூ.990 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்தினை யாரெல்லாம்…

Read More

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குகடங்காமல் பரவி வந்தது. இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள். இதற்காக தமிழக அரசு பல இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை திறந்து வைத்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளை மூன்று வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் இருப்பதற்கான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானவர்களுக்கு, ஆக்சிஜன் அளவு 94 ஆக இருந்தால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என்றும், வீடுகளிலேயே அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள பரிந்துரை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழாக 90-க்குள் இருந்தால், அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை…

Read More

ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலகின் 193 ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளில் புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை தடுக்கும் நோக்குடன், 1987ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் புகையிலை எதிர்ப்பு நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துகிறோம் என உறுதிமொழி எடுப்பதன் நோக்கமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா கோராதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், “புகைபிடிப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் இவர்கள் உயிரிழப்பதற்கு 50% வாய்ப்புகள் உள்ளது” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஆதனோம் தெரிவித்து இருக்கிறார். கொரோனாவால் ஏற்படும் ஆபத்தை குறைக்க புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது எனக் கூறும் அவர், புகைப்பிடிப்பதனால் ஏற்படும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்ககளையும், இதய நோய்களையும் தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும்…

Read More

கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தார்கள். மேலும் இந்நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான பண வசதி இல்லாமல் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் இந்நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்காக பொதுத்துறை வங்கிகள் கடன் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. அதன்படி, கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை தனிநபர்கடன் வழங்கப்படும் என்று பொதுத்துறை வங்கிகள் அறிவித்து இருக்கிறது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கொரோனா சிகிச்சைக்காக 5 லட்சம் வரை பிணையற்ற (ஜாமீன் அல்லது சொத்து இல்லாவிட்டாலும்) கடன்களை வழங்க தயாராக உள்ளது. மேலும் இக்கடனை திருப்பிச் செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் கொடுப்பதாக வங்கிகள் தெரிவித்து இருக்கிறது. எஸ்பிஐ வங்கி மட்டும் கடன் தொகைக்கான…

Read More

கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு இடையே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஞாயிற்றுக்கிழமை கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை அல்லாத இடங்களிலிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான வரம்புகளை அதிகரித்து இருக்கிறது. கொரோனா நோய் தொற்று பரவல் சமயத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், எஸ்பிஐ (SBI) செக் புக் அல்லது படிவத்தின் மூலம் கணக்கு இல்லாத எஸ்பிஐ கிளைகளில் இருந்து பணத்தை எடுப்பததற்கான வரம்புகளை அதிகரித்துள்ளது” என்று எஸ்பிஐ வங்கி ட்வீட்டர் செய்துள்ளது. எஸ்பிஐ பணத்தை திரும்பப் பெறும் வழிகாட்டு விதிமுறைகள்: சேமிப்பு வங்கி பாஸ் புக் உடன் Self என்ற வகையில் மூலம் பணத்தை எடுத்தல் (படிவத்தைப் பயன்படுத்தி) ஒரு நாளைக்கு ரூ.25,000 ஆக மாற்றப்பட்டுள்ளது. Self காசோலை மூலம் பணத்தை (செக்கை பயன்படுத்தி) எடுத்தல் ரூ.1 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பினரால் பணத்தைத் (காசோலையைப் பயன்படுத்தி மட்டுமே) திரும்பப் பெறுவது ரூ.50,000 ஆக திருத்தப்பட்டுள்ளது.…

Read More

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு வேகம் சற்று குறைந்துள்ளது. ஆனால் கோவையில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையவில்லை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு நடத்தினார். கொரோனா வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்கள் அணியும் கவச உடை (பிபிஇ கிட் ) அணிந்து நோயாளிகளை நலம் விசாரித்தார். கடந்த சில தினங்களாக சென்னையை காட்டிலும், கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். அங்கு கொரோனா சிகிச்சைக்காக கூடுதல்படுக்கை வசதிகளை திறந்து வைத்தார். மேலும் தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான பணி உத்தரவுகளையும் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆய்வு…

Read More

கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்தத் தொகை வட்டியோடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணமாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்றும், அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் அல்லது உறவினரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000 உதவி தொகை வழங்கப்படும் என்றும், அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை இந்த தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம்…

Read More

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை அலுவலகங்களில் காலியாக உள்ள மேலாளர், உதவி கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்விதகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர் : AI Airport Service Limited மொத்த காலிபணியிடங்கள்: 15 பணியின் பெயர் : Manager-Finance – 04 மாதச் சம்பளம்: ரூ.50,000 பணியிடம்: சென்னை, தில்லி, கொல்கத்தா கல்வித்தகுதி: Chartered Accountant தேர்ச்சி அல்லது Cost Accountant -இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர் : Officer-Accounts – 07 மாதச் சம்பளம்: ரூ.32,200 பணியிடம்: சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை கல்வித் தகுதி: Inter Chartered Accountant, Inter Cost and Management Accountancy அல்லது MBA (Finance) போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர் : Assistant Accounts…

Read More