பொதுவாக மனிதர்களுக்கு கவலை, மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற காரணங்களால் தூக்கமின்மை உண்டாகும். அதேபோல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் பாதிப்பு அடைக்கிறார்கள், இதனால் அவர்கள் தூக்கமின்மை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக தன்னைப் பற்றியும், தன் அன்புக்குறியவர்களைப் பற்றியுமான பயம் மற்றும் பதற்றமே இதற்க்கு காரணம். பயம், பதற்றம் போன்ற காரணங்களாலும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு, இதிலிருந்து மீண்டவர்கள் பலர் மனச்சோர்வு, மனப்பதற்றம் ஆகிவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். தூக்கமின்மை அறிகுறிகள் தூக்கமின்மையால் நாம் உடல் ரீதியாகி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை என்றால் நீங்கள் இன்சோம்னியா ( Insomnia ) என்னும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கீர்கள் என்று அர்த்தம். இந்த பிரச்சனை உள்ளவர்க்கு தூக்கம் வந்தாலும் எழும்போது ஃபிரெஷான…
Author: gpkumar
ஹைலைட்ஸ்: உலகளவு கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துவிட்டது. கொரோனா தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி, மக்களை பாடாய்படுத்தி விட்டது. தற்போது தொற்று பரவல் சற்று குறைந்து ஓரளவு பரவாயில்லை என்ற நிலைமைக்கு வந்திருக்கிறது. சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல், படுக்கைகள் கிடைக்காமல் பலர் உயிரிழப்பு என்ற மோசமான நிலையும் இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் 3,741 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துவிட்டது. கொரோனா உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது.…
பொதுவாக குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதை மனதில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளை எந்தவித நோய் தொற்றும் பாதிக்காதவாறு வளர்க்கவேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் முதலில் குழந்தையின் வெப்பநிலையையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைக்கு100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால் பாரசிட்டமால் மருந்துகள் எவ்வளவு அளவு என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்து சரியான அளவில் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை, திரவ ஆகாரங்களாக கொடுக்க வேண்டும். இது குளிர்ச்சியாக இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளை சுத்தமாக, சுகாதாரமாக வைத்து கொள்ளவேண்டும். குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி, ஜிங்க் மருந்துகளை பாதுகாப்பாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஆன்டி பயாடிக் மருந்துகளை கொடுக்கலாமா? பெரியவர்கள் “அஸித்ரோமைஸின்” என்ற ஆன்டி பயாடிக் மாத்திரையை பயன்படுத்தி வருகிறார்கள். இதை குழந்தைக்கு பயன்படுத்தலாமா? என்று கேட்கலாம். இதுவரை இதற்கு…
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தபோதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவர்கள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்த முழுமுடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது தொடர்ந்து அமல்படுத்தலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த எந்த வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1. இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதி. 2. நாளை அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி.…
மாங்காய் என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். மாங்காய் விலை மலிவாகவும், மிக எளிதாகவும் கிடைக்க கூடியது. இதில் ஊறுகாய் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். பொதுவாக மாங்காய் ஊறுகாயை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். மாங்காயில் இனிப்பு ஊறுகாய் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்ப்போம். இனிப்பு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் மாங்காய் – 1 கிலோ, உப்பு – 50 கிராம், மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன், வெல்லம் – 200 கிராம், நல்லெண்ணெய் – 100 கிராம், சிறிதளவு பெருங்காயம், வெந்தயம் தூள், கடுகு தலா – 1 ஸ்பூன். செய்முறை: மாங்காயை சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி, உப்பு சேர்த்து 3 நாட்கள் ஊற வைக்கவேண்டும். பிறகு வெயிலில் நீர் சுண்டும் வரை உலர்த்தி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்…
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்தவகையில், நேற்று ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் 1,269 பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், இதுவரை 30,521 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் தற்பொழுது மதுரையில் கொரோனோ பரவல் சராசரியாக 13 சதவீதமாக உள்ளது. கொரோனோ பாதிப்பு அதிகரிப்பால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெருவதற்கான ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். இதற்கிடையே கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்கும் பணியில் சுகாதாரத் துறை முழுவீச்சில் இறங்கியது. அதன்படி, மதுரை தோப்பூரில் உள்ள காசநோய் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரனோ சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக…
இந்தியாவில் தற்போது கொரோனாவை தொடர்ந்து மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தொற்று மற்றொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை நோய் ஆகும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கருப்புப் பூஞ்சை நோய் தொற்றை கண்டறிதல், சிகிச்சை முறை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கருப்புப் பூஞ்சைக்கு முகம் வீக்கம், கண் கீழ் பகுதியில் வீக்கம், மூக்கடைப்பு, ஈறுகளில் புண் உள்ளிட்டவை அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கு, கண் பகுதியில் CT – PNS (சிடி-பிஎன்எஸ்) ஸ்கேன், அல்லது முகம் முழுவதும்…
இந்திய தொழில்நுட்ப நிறுவனமான மண்டியில் கற்பித்தல் அல்லாத காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். IITMandi/F/Recruit/NTS/2021/01 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2021 பணியின் பெயர் : Junior Engineer (Civil) காலிபணியிடங்கள்: 03 கல்வி தகுதி: பொறியியல் பிரிவில் சிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கணினி பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.35,400 – 1,12,400 பணியின் பெயர் : Junior Laboratory Assistant (Technical) காலிபணியிடங்கள்: 14 வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி: , எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.…
சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA) அதிகாரப் பிரிவில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை பணியின் பெயர் : Deputy Manager (Technical) காலி பணியிடங்கள்: 41 வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.15,600 – 39.100 கல்வி தகுதி: Degree in Civil Engineering தேர்வு செய்யப்படும் முறை: GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: http://vacancy.nhai.org/vacancy/DMApplicationForm.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2021 மேலும் முழுவிவரங்களை www.nhai.gov.in or https://nhai.gov.in/#/vacancies/current என்ற லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஹைலைட்ஸ்: தமிழக அரசின் அனைத்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் “மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. ஓட்டுனர் பேருந்தை பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. வயது முதிர்ந்த பெண்கள் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும்,பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த மே 8 ஆம் தேதியிலிருந்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணித்து வருகின்றார்கள். மேலும் பெண்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில், தமிழக அரசின் அனைத்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் “மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. மேலும் தற்போது நகரம் மற்றும்…
ஹைலைட்ஸ்: நாளை சேலம், ஈரோடு, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு சென்று, அங்குள்ள கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை நாளை திறந்து வைக்கிறார். நேரு விளையாட்டரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை நேரில்ஆய்வு மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்காக 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வருவதாக தகவல் வெளியாகி…
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல சிறந்த முயற்சிகள் எடுத்தாலும், தற்போது மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தொற்று காரணமாக மற்றொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. நிரிழிவு நோயாளிகளுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்நோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டிராய்டு என்ற மருந்தை எடுத்து கொள்கிறார்கள். இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் போது இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இவர்களை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். கருப்பு பூஞ்சை யாரை தாக்கும்? நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கருப்பு பூஞ்சை தாக்கும். ஸ்டிராய்டை தவறான அல்லது அதிகமாக பயன்படுத்தினால் கருப்பு பூஞ்சை தாக்கும். கொரோனாவில் இருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை எளிதில் தாக்குகிறது. கருப்பு பூஞ்சை நோய் கண்களில்…
ஹைலைட்ஸ் : தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் முதல் முறை வெளியே வந்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம். இரண்டாம் முறை வெளியே வந்தால் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு…
ஹைலைட்ஸ்: பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள். கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக கூறியிருக்கிறார். ஒரு ஆட்டத்துக்கு உடல் ரீதியாகத் தயாராகுவதுடன், மன ரீதியாகவும் தயாராக வேண்டும். கொரோனா பரவல் காரணமாக கிரிக்கெட் ஆட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விளையாட்டு வீரர்களின் மனநலம் குறித்த உரையாடலுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் சில வீரர்கள் வீடு திரும்பியதும் நடந்துள்ளது. 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக கூறியிருக்கிறார். போட்டிக்கு முன் நான் செய்யும் விஷயங்கள் தான் முக்கியம் என்று பின்னர் உணர்ந்தேன் என்கிறார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆட்டத்தில் வீரர்களின் மனநலம் பற்றிப் பேசியதாவது, ” ஒரு ஆட்டத்துக்கு உடல் ரீதியாகத்…
