Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

பொதுவாக மனிதர்களுக்கு கவலை, மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற காரணங்களால் தூக்கமின்மை உண்டாகும். அதேபோல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் பாதிப்பு அடைக்கிறார்கள், இதனால் அவர்கள் தூக்கமின்மை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

குறிப்பாக தன்னைப் பற்றியும், தன் அன்புக்குறியவர்களைப் பற்றியுமான பயம் மற்றும் பதற்றமே இதற்க்கு காரணம். பயம், பதற்றம் போன்ற காரணங்களாலும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு, இதிலிருந்து மீண்டவர்கள் பலர் மனச்சோர்வு, மனப்பதற்றம் ஆகிவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

தூக்கமின்மை அறிகுறிகள்

தூக்கமின்மையால் நாம் உடல் ரீதியாகி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை என்றால் நீங்கள் இன்சோம்னியா ( Insomnia ) என்னும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கீர்கள் என்று அர்த்தம்.

இந்த பிரச்சனை உள்ளவர்க்கு தூக்கம் வந்தாலும் எழும்போது ஃபிரெஷான உணர்வு இருக்காது. மேலும் இவர்களுக்கு சோர்வு, எரிச்சல், மனநிலையில் மாற்றம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் தூக்கமின்மை வருகிறது..?

கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு மக்கள் தூக்கமின்மையை எதிர்கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கிறது. கவலை, மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற காரணங்களால் இவர்கள பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பல வாரங்கள் தனியாக தங்கியிருந்த காரணமாகவோ அல்லது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாலோ தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்.

நோயாளிகளின் பகல்நேர ஓய்வு தூக்கம் இரவு நேர தூக்கத்தை சிதைக்கிறது. இதனால், நோயாளிகள் பகலில் நீண்ட நேரம் தூங்குவதை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவ ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். ஏன்னென்றால் இவர்கள் கொரோனா பாதிப்பு பக்க விளைவுகளிலிருந்து மீள அதிக நாட்கள் ஆகும்.

தூக்கமின்மை பிரச்சனையை போக்க சில எளிய வழிகள்

நீங்கள் தினம் தூங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இதை தினமும் நீங்கள் பின்பற்றினால் அந்த நேரத்தில் தூக்கம் தானாக வரும்.

தனிமையில் இருக்கும்போது செல்ஃபோனை அதிகம் பார்ப்பதை தவிர்க்கவும். மேலும் செய்தி, சமூகவலைதளங்கள் பார்ப்பதையும் தவிர்க்கலாம்.

கஃபைன் பானங்கள் குடிப்பதை தவிர்க்கலாம். காஃபி அதிகம் குடித்தாலும் உங்கள் தூக்கம் தடைபடும்.

கொரோனா பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்தாலும் அறையிலேயே உடற்பயிற்சி, யோகா செய்யுங்கள். இதனால் உடலுக்கு சுருசுருப்பு கிடைக்கும். தூக்கமும் நன்றாக வரும்.

தினமும் 15 நிமிடம் மன அமைதிக்காக மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யலாம்.

இவை அனைத்தும் உங்களுக்கு நிம்மதியையும், தூக்கத்தையும் தரும்.

Share: