• நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்யமான உணவு வகைகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் பழவகைகளையும்,காய்கறிகளையும் நாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம்.
  • இதில் பழங்களை உண்ணும்போது அதன் குணங்கள் பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் நல்லது. அந்த வகையில் அன்னாசி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பார்க்கலாம்.
  • அன்னாசி பழத்தை அளவாக சாப்பிடுவதால் நமக்கு நிறைய பயன்கள் கிடைக்கும். இதில் பல உடல்நலத்திற்கு தேவையான பயன்கள் இருப்பது போல சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகள் இருக்கிறது.
  • இயற்கையாகவே அன்னாசி பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் நல்லது கிடையாது.
  • இந்த பழம் நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
  • மேலும் பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸாக செய்து சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படும்.
  • இந்த பழத்தை அதிகமாக சாப்பிடும் போது பற்களில் கறை ஏற்படும். பற்களின் எனாமல் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • சில சமயங்களில் இந்த பழம் சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும். அன்னாசி பழத்தில் அதிக அளவில் அசிடிட்டி உள்ளது.
See also  லிவோஜென் மாத்திரையின் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்