தயிர் இயற்கையான உணவு என்றாலும், இதனுடன் சில குறிப்பிட்ட உணவு வகைகளை கலந்து சாப்பிட்டால், நமக்கு ஏற்படும் நன்மைகளை விட பக்கவிளைவுகளே அதிகம்.

ஒரு பாத்திரத்தில் சுத்தமான பால் கிரீம் நிரம்பிய தயிரில், அரிந்த பழங்களை அதில் தூவி சாப்பிடுவது என்பதே அளப்பரிய ஆனந்தத்தை தரும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கப் போவதில்லை. வைட்டமின் பி2, கால்சியம், வைட்டமின் பி12, மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை தயிரில் மிக அதிகளவில் உள்ளன. தயிர் எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுப்பொருள் ஆகும்.

தயிர் உடன் சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் அது நம் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாற்றக் கூடிய சில உணவு பொருட்கள் என்ன என்பதை பார்ப்போம்.

​வெங்காயம்

உங்களுக்கு தயிர் உடன் வெங்காயம் கலந்த கலவையை அதிகம் விரும்பி சாப்பிட பிடிக்கும் என்றால், நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை முதலில் மாற்றிக்கொள்வது நல்லது. ஏனெனில் தயிர் என்பது இயற்கையிலேயே நமது உடலுக்கு குளிர்ச்சி தன்மையை கொடுக்கும். வெங்காயம் நமது உடலுக்கு வெப்பத்தை தரக்கூடியது. தயிர் உடன் வெங்காயத்தை அதிகம் விரும்பி சாப்பிடுவதால் தோல் அலர்ஜியை ஏற்படுத்தும், உடல் அரிப்பு, எக்ஸிமா, சோரியாசிஸ் போன்ற குறைபாடுகளை நமது உடலில் ஏற்படுத்தி விடும்.

​மாம்பழம்

சிறிதளவு தயிர் உடன் மாம்பழங்களை சேர்த்து சாப்பிடுவதால் சுவை அதிகமாக இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும். வெங்காயத்தை போன்றே மாம்பழமும் நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்கவல்லது ஆகும். தயிர் உடன் மாம்பழத்தை சாப்பிடுவதால் தோல் சம்பந்தமான நோய்கள், உடலின் செயல்பாடுகள் தடைபடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

​மீன்

புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப்பொருள் தயிர் ஆகும். இவை மாடுகளில் இருந்து பெறப்படுவதால் இது விலங்கு புரத வகையை சேர்ந்தது ஆகும். அதேபோல், மீனில் அதிகளவில் புரதம் உள்ளது. இதுவும் விலங்கு வகை புரதம் ஆகும். எப்போதும் ஒரு விலங்கு வகை புரதத்துடன் இன்னொரு விலங்கு வகை புரதத்தையோ அல்லது தாவர வகை புரதத்துடன் இன்னொரு தாவர வகை புரதத்தையோ சேர்த்து சாப்பிடக்கூடாது. இது நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தயிர் உடன் மீன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் .

பால்

பால் மற்றும் தயிர் மாடுகளில் இருந்தே பெறப்படாலும், இவை இரண்டும் விலங்கு வகை புரதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, உப்பிசம் மற்றும் வாய்வுக் கோளாறு போன்றவை ஏற்பட காரணமாக அமைந்து விடும்.

See also  பாகற்காயின் நன்மைகள்

உளுந்தம்பருப்பு

உளுந்தம் பருப்பினால் செய்த உணவுகளை தயிர் உடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அது வயிற்றில் செரிமான பிரச்சினையை ஏற்படுத்தி இறுதியில், வயிற்று உப்பசம், வாய்வுக் கோளாறு, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது பேதி போன்ற மோசமான நிலைக்கு தள்ளிவிடும் .

​எண்ணெய் நிறைந்த உணவுகள்

எண்ணெய் மிக்க உணவுகளுடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து சாப்பிடும் போது அது செரிமானத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல், நம்மை விரைவில் சோர்வு அடைய செய்துவிடுகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்ட பின் லஸ்ஸி போன்ற பானங்களை அருந்தும்போது , வெகுவிரைவில் உறங்கி விடுவதற்க்கான காரணமும் இதுவே ஆகும்