நடிகர் விவேக் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

59 வயதான நடிகர் விவேக் நேற்று(வியாழக்கிழமை) சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் COVIT-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ளவேண்டும். கொரோனா தடுப்பூசி குறித்து எவ்வித பயமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் உங்களுக்கு இருக்காது

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள பொது நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்று அவர் கூறினார்.

தற்போது தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். நடிகர் விவேக் மருத்துவமனை சேர்க்கைக்கான காரணம் COVIT-19 தடுப்பூசியா என்பது இன்னும் தெரியவில்லை.

See also  வசூல் சாதனை படைத்திருக்கும் ஜதி ரத்னலு திரைப்படம்

Categorized in: