ஹைலைட்ஸ் :

  • மருத்துவத் தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அணுகலாம்.
  • மருந்து விநியோகிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மாநிலம் முழுவதும் சுமார் 40,000 மொத்த மருந்து விற்பனையாளர்கள் இணைந்து, மருந்து விநியோகிக்கும் சேவையை ஆரபித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு மருந்து தேவை, மருத்துவத் தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணுக்கு தங்கள் தேவை மற்றும் முகவரியை பதிவு செய்தால், அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் வீட்டிற்க்கே வந்து மருந்துகள் வழங்கும் வகையில் புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு உற்பத்தி செய்யப்படும் விலையிலேயே மருந்துகள் விற்கப்படும் என்றும், மருந்து விநியோகிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்..

மருத்துவர்களின் ஆலோசனை தேவைப்படும் நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் செல்போனில் ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் கூறினார்.

See also  28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலகக் கோப்பை வென்ற தினம்