Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Red Meat tpt2

பெண்கள் சிவப்பு இறைச்சி பயன்படுத்தகூடாது ….

  • சிவப்பு இறைச்சியில்(Red Meat ) புரதம் அதிகம் இருக்கிறது என்று சொல்லபடுகிறது. ஆகையால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பிறைச்சி உண்பதை தவிர்க்கவே மருத்துவர்கள் ஆலோசனை தெறிகிறார்கள்.
  • அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது தெரியுமா? அதை பற்றி இப்போது காணபோம்.
  • அடுத்த தடவை நீங்கள் இரவு நேர உணவை சமைப்பதாக இருந்தால் அதில் சிவப்பு இறைச்சியை தவிர்த்து நல்லது. புதியதா, சுத்தமான சால்மன் மீன் அல்லது தோல் அற்ற கோழிக்கறியை சமைக்கலாம்.
  • ஏனெனில் ஹார்வர்ட் பல்கலைகழகம் தற்பொழுது நடத்திய ஆய்வில் சிவப்பு இறைச்சியின் காரணமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதாகவும், அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது. Red Meat tpt

புற்றுநோய் அபாயத்தை தடுக்க

  • மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க,தினசரி சிவப்பு இறைச்சி உணவாக எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக கோழி, மீன் மற்றும் தானியம் , விதைகளை போன்ற குறைத்த புரதத்தை உடைய உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு பி.எம்.ஜே எனும் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வில், ஆய்விற்காக அவர்கள், 20 ஆண்டுகளுக்கு 89,000 பெண்களை பின் தொடர்ந்தனர். அவர்கள் பதப்படுத்தப்படுத்தப்பட்ட உணவுகளான சிவப்பு இறைச்சி அதாவது, மாட்டிறைச்சி, பன்றி மற்றும் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன், மற்றும் பருப்பு வகைகளான பீன்ஸ், பயறு, பட்டாணி மற்றும் விதைகள் போன்றவற்றை தினமும் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது.
  • பெண்களிடம் இதைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் சிவப்பு இறைச்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது. கூடுதலாக ஒரு நாளைக்கு 2 முறை எடுத்துக்கொள்ளும் சிவப்பு இறைச்சியும் புற்றுநோய்க்கான ஆபத்தை மேலும் 13 சதவீதம் அதிகப்படுத்துகிறது.
  • ஆனால் சிவப்பு இறைச்சிக்குமாறாக ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்றி கோழி போன்ற கறியை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது .​depositphotos 4479267 stock photo huge red meat chunk isolated

    தொடர்புகள்

  • சிவப்பு இறைச்சிக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தெளிவான அளவில் தொடர்புகள் இல்லை என்றாலும் இதுக்குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு சிலர் யுகிக்கின்றனர். அதாவது அதிக வெப்பநிலையில் சிவப்பு இறைச்சியை தயாரிக்கும்போது, புற்றுநோயை உண்டாக்கும் துணை விஷயங்கள் வெளியிடுவதாக கூறப்படுகிறது.
  • அடுத்த கோட்பாடு என்னவென்றால் பெண்களின் ஹார்மோன் அளவு அதிகரிக்க காரணமான இந்த கால்நடைகளின் வளர்ச்சிக்கு அதிக ஹார்மோன்கள் தேவையின் காரணமாக அவற்றை உண்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர காரணமாக உள்ளது.
  • மேலும் சிவப்பு இறைச்சியை பதப்படுத்துவதன் மூலம் அதில் உள்ள நைட்ரேட்டுகள் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்துடன் தொடர்புடையவை.

​சிவப்பு இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி

  • சிவப்பு இறைச்சி மூலம் வரும் பாதிப்புகளில் மார்பக புற்றுநோய் மட்டுமல்லாமல் அல்சைமர் நோய் , இதய நோய், பக்கவாதம், அதிக கொழுப்பு, இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உயிருக்கு அபாயமான பிரச்னைகளை அதிகரிப்பதில் சிவப்பு இறைச்சிக்கு முக்கிய பங்குவகிக்கின்றன.

​இறைச்சி உண்ணலை கட்டுப்படுத்துதல்

  • சிவப்பு இறைச்சியில் அதிக கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்டவை என்பதால் அவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க புற்றுநோய் தடுப்பு சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
  • அல்லது அதற்கு மாறாக மீன் அல்லது கோழி போன்ற புரத உணவுகளை தேர்வு செய்ய சொல்கிறது. சிவப்பு இறைச்சிக்கு பதிலான சில மாற்று உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.Red  Meat

சைவ பர்கர்கள்

பர்கர்களில் அதிகமான சிவப்பு இறைச்சி சேர்க்கப்படுகிறது.அதனால் சிவப்பு இறைச்சிக்கு பதிலாக அதில் காளானை சேர்க்கலாம். அப்போது நமக்கு கறியை போன்றே சுவை காளான் அளிக்கிறது.

​பீன்ஸ் சூப்

  • உங்களுக்கு பிடித்த சூப்கள், கூட்டுகள் ஆகியவற்றை நன்றாக ருசிக்க வைக்க ஒரு முறை உள்ளது. பீன்ஸை மாட்டிறைச்சி மாறாக பயன்படுத்தலாம்.
  • ஏனெனில் பீன்ஸ் அதிக புரதச்சத்து, நார்ச்சத்து கொண்டவை. மேலும் குறைவான கொழுப்பு சத்துக்களை கொண்டவை.
  • எனவே பெண்கள் சிவப்பு கறியை ஏன் அதிக அளவு சேர்த்திக்கொள்ள கூடாது என்பதை இப்போது தெரிந்து இருப்பிர்கள் . எனவே முடிந்த அளவு இவற்றை உணவில் குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது