Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி, பூமியைத் தாண்டி வேற்று கிரகத்தில் இதுவரை பறந்ததில்லை என்ற நிலையை மாற்றி அமெரிக்க விண்வெளி மையமான நாசா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை மனித குலத்தின் மிக பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

விண்வெளி மையமான நாசா விடாமுயற்சி என்று கருதப்படும் பெர்சிவரன்ஸ் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தரையிறக்கியது. அதில் உள்ள 1 கிலோ 800 கிராம் எடையுள்ள இன்ஜெனியூட்டி என்ற சிறிய ஹெலிகாப்டர் கடந்த ஜூலை மாதம் விண்கலத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டது. பெர்சிவரன்ஸ் என்ற விண்ணூர்தி 7 மாதங்களில் 292 கிலோ மீட்டர் பயணம் செய்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ஜெசோரா பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதனால் பெர்சிவரன்ஸ் ரோவரை வழிநடத்தும் குழுவின் தலைவராக பணியாற்றிய சுவாதி மோகனுக்கு உலக அரங்கில் பாராட்டுக்கள் குவிந்தது. அடுத்த சில நாட்களில் பெர்சிவரன்ஸ் எடுத்த புதிய புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகள், மணற்பகுதிகளை ஆய்வு செய்யும் பெர்சிவரன்ஸ் ரோவர் 2030 ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரோவரில் உள்ள இன்ஜெனியூட்டி என்ற சிறிய ஹெலிகாப்டரை பறக்க விட இரண்டு முறை முயற்சி செய்தது. தொழில் நுட்ப கோளாறு காரணத்தால் ஹெலிம்பெக்டரை பறக்க விடுவதற்க்கான முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தில் உள்ள இன்ஜெனியுட்டி என்ற சிறிய ஹெலிகாப்டர் நேற்று இயக்கப்பட்டது. வெற்றிகரமாக ஹெலிகாப்டர் 30 விநாடிகள் வரை பறந்ததாக நாசா கூறியுள்ளது. ஹெலிகாப்டர் பறந்ததை நாசா விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

Share: