Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

Xiaomi தனது ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்ப்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது என்று அதன் ட்வீட்டர் அக்கவுண்ட் வழியாக டீஸர் செய்துள்ளது.வெளியான ட்வீட் ஆனது “#10on10” என்ற ஹேஷ்டேக்குடன் “ரெட்மி புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ரெட்மி நோட் தொடரில் ஏற்கனவே 10 மோனிகர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், சியோமி தனது ரெட்மி வரிசையில் கொண்டு வர முயற்சிக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்த சீரிஸ் இந்தியாவில் ரெட்மி 9 தொடரின் வாரிசாக கருதப்படும்.

ரெட்மி 9 சீரிஸ் மொத்தம் ஐந்து மாடல்கள் உள்ளன. இதில் ரெட்மி 9, ரெட்மி 9 ஏ, ரெட்மி 9 ஐ, ரெட்மி 9 பிரைம் மற்றும் ரெட்மி 9 பவர் ஆகியவை அடங்கும். ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் எந்த மாதிரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் விலையை எளிதில் யூகித்துவிடலாம். ரெட்மி நோட் தொடர் ரூ.10,000 முதல் 20,000 பட்ஜெட்டில் உள்ளதால், ரெட்மி 10 சீரிஸ் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடரின் தொடக்க விலை ரூ .10,000 ஐ விடக் குறைவாக இருக்கும் என்பது உறுதி.

நிறுவனம் புதிய ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்ப்போனை அடுத்த மாதம், அதாவது ஜூலை 2021ல் அறிமுகப்படுத்த உள்ளது. ரெட்மி 10 சீரிஸ் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு வலுவான போட்டியாளராக இருப்பது உறுதி, மேலும் புதுப்பிக்கப்பட்ட மாடல்களுடன் விலை வரம்பில் சியோமிக்கு உறுதியான இடமாக இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.

Share: