ஹைலைட்ஸ் :

  • வெல்லம் மற்றும் எலுமிச்சையின் பயன்கள்.
  • வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு உடல் பருமனை குறைக்க பயன்படுகிறது.
  • வெல்லம் மற்றும் எலுமிச்சை, இந்த கலவை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்குகிறது.

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் அதிகரிப்பு பிரச்சனையின் காரணமாக, உடற்பயிற்சி கூடங்களில் தங்களின் பொழுதுகளை கழிக்கின்றனர்.

இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நாம் இயற்கை பானங்களை அருந்தவேண்டும்.

பிரசவித்த தாய்மார்கள் குழந்தை பிறப்பிற்க்கு பின் அதிக உடல் எடையுடன் காணப்படுவார்கள்.

பின் அவர்கள் தங்களின் பழைய நிலையை அடைய அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.

அவர்கள் இந்த வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை தினமும் குடிப்பதன் மூலம் அவர்களின் எடையில் மாற்றத்தை காணலாம்.

அதேபோல் வயது அதிகரிக்க அதிகரிக்க தங்களின் உடல் எடையில் மாற்றத்தை பார்க்கும் 90s காலகட்டத்தினர்,இதுபோன்ற உடலுக்கு நன்மை தரும் பானங்களை குடிப்பதன் மூலம் தங்களின் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.

வெல்லத்தை எலுமிச்சை சாறுடன் காலத்து குடிப்பதன் மூலம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

நம் உடலில் மெட்டபாலிசம் அதிகரிப்பதன் மூலம் உடலின் எடை தானாக குறையும்.

இந்த பானத்தை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள அழுக்குகள், டாக்சின்கள் போன்றவை அழிந்துவிடும்.

வெல்லம் கலந்த எலுமிச்சை பானத்தை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை பெரும்.

நாள் முழுவதும் ஆரோகியத்துடனும்,புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ளும்.

இந்த பானத்தை குடித்தால் ஒரு வாரத்தில் 2 முதல் 3 கிலோ வரையிலான எடையை குறைக்கலாம்.