ஹைலைட்ஸ்:

  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதலிடம்.
  • கேப்டன் கோலி (ம) படிக்கல் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
  • தேவ்தத் படிக்கலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரில் 16 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கேப்டன் விராட் கோலி பௌலிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் ஒருசில ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழத்தனர்.

இந்த நிலையில் சிவம் துபே, ரியான் பராக் இருவருக்குமான பார்ட்னெர்ஷிப் கைகொடுத்தது. சிவம் துபே 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசியில், ராகுல் திவார்டியா திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ரன்கள் சேர்த்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணி தலைமையில் சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனை அடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரூ அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலியும், தேவ்தத் படிக்கலும் கைகோர்த்தனர்.

முதல் ஓவரில் இருத்தே ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை தெறிக்கவிட்டனர். கடைசி வரை நின்று ஆடிய கோலி, படிக்கல் ஜோடி விக்கெட் இழப்பின்றி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். 17 வது ஓவரின் 3 வது பந்தில் வெற்றி இலக்கை கைப்பற்றினர். 178 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது.

கேப்டன் விராத் கோலி, 47 பந்துகளில் 72 ரன்களை குவித்தார். இளம் வீரரான தேவ்தத் படிக்கல் 52 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார். இந்த ஐபிஎல் தொடரில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் படிக்கல். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த ஐபிஎல் போட்டியில் 181 ரன்கள் குவித்த கோலி – படிக்கல் ஜோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி சார்பில், அதிக ரன்கள் குவித்த தொடக்க ஜோடி என்ற சாதனையை அடைந்தது. அதேபோல் விக்கெட் இழப்பின்றி அதிக ரன்களை கைப்பற்றியதால் அணிகளின் வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3வது இடம் பிடித்தது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

See also  ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம்