• ஐ.பி.எல். லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
  • இந்தியாவில் பதினான்காவது ஐ.பி.எல் தொடர் நடக்கிறது.நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடத்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை,பெங்களூரு அணிகள் மோதின.
  • பெங்களூரு அணி ‘டாஸ் ‘ வென்றது. பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி ‘பீல்டிங்’ யை தேர்வு செய்தார்.
  • மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 19 ரன் எடுத்து சுமாரான துவக்கத்தை தந்தார். பின்னர் இணைந்த கிறிஸ் லின் 49 ரன்னும் , சூர்யகுமார் யாதவ் 31ரன்னும் எடுத்தைகள். இந்த ஜோடி மும்பை அணிக்கு நம்பிக்கை தந்தது.
  • இவர்களுக்கு அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னும், இஷான் கிஷான் 28 ரன்னும், குர்னால் பாண்ட்யா 7 ரன்னும், போலார்டு 7 ரன்னும் எடுத்தார்கள்.
  • மார்கோ ஜான்சென் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்ஷல் படேல் பந்து வீச்சில் வெளியேறினர்.
  • மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியில் பும்ரா 1 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
  • 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற டார்கெட்யை RCB(பெங்களூரு) அணிக்கு MI (மும்பை) அணி வைத்த நிலையில், RCB அணி வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னும் , மேக்ஸ்வெல் 39 ரன்னும் எடுத்தார்கள்.
  • இவர்களுக்கு பிறகு ஆடிய ரஜத் படிதர் 8 ரன் மட்டும் எடுத்தார். இதற்கு பின்னர் இணைந்த கேப்டன் கோஹ்லி 33 ரன்னும், மேக்ஸ்வெல் 39 ரன்னும் எடுத்தார்கள். இந்த ஜோடி ஓரளவு RCB அணிக்கு கைகொடுத்தது.
  • அடுத்து வந்த ஷபாஸ் அகமது ஒரு ரன்னும், டேனியல் கிறிஸ்டியன் ஒரு ரன்னும் எடுத்தார்கள்.
  • ராகுல் சகார், பவுல்ட் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட டிவிலியர்ஸ், பும்ராவின் 19வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். RCB அணி கடைசி ஓவரில் 7 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது.
  • டிவிலியர்ஸ் 48 ரன் எடுத்து RCB அணிக்கு கைகொடுத்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்ஷல் 4 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
See also  youtube-ல் 100 கோடி பார்வையாளர்களை கடந்த தனிப்பாடல்