ஹைலைட்ஸ்: சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் சில உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்க கூடாது கைதிகளை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை தவிர, மற்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காணொலியில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ள நிலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மரணம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில் சென்னை…
Author: gpkumar
ஹைலைட்ஸ்: அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒருமாத ஊதியம் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி அளித்து வருகின்றார்கள். அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒருமாத ஊதியம் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் அக்கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரத்தை மீண்டெழுவதற்கும், கொரோனா பேரிடரை எதிர்கொள்ளவும் தங்களால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…
ஹைலைட்ஸ் : தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது. புதிய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.…
ஹைலைட்ஸ்: பொறியியல் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் நடத்தப்பட்டது. அரியர் தேர்வு எழுதிய பொறியியல் மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதலாமாண்டு பொறியியல் மாணவர்களின் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்தது. இந்த தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக கல்லூரி மாணவர்களால் பருவ தேர்வு எழுத முடியாமல் கூட போனது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் 11-ஆம்…
ஹைலைட்ஸ்: பூண்டில் தாதுக்களும், வைட்டமின்களும், சல்பர், குளோரின், அயோடின் போன்ற சத்துக்களும் அதிகளவு உள்ளது. பூண்டு ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயன பொருளுக்கு, இரத்த உறைதல் தன்மையை தடுக்கும் குணம் உள்ளது. இது இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாதை தடுக்கிறது. நம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்து கொள்ளவது மிகவும் நல்லது. பூண்டு ஒரு சிறந்த உணவாகவும், மருந்தாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டை நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் நம் உணவில் சேர்த்து கொள்கிறோம். ஆனால் பூண்டில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. அதை பற்றி பார்ப்போம். பூண்டில் தாதுக்களும், வைட்டமின்களும், சல்பர், குளோரின், அயோடின் போன்ற சத்துக்களும் அதிகளவு உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், சீனா ஆகிய நாடுகளிலும் எல்லா வகை உணவுகளிலும் பூண்டை சேர்த்து கொள்கிறார்கள். தினமும் பூண்டை பயன்படுத்தி வந்தால், சளி குறைந்துவிடும். மேலும் பூண்டில் உள்ள பக்டீரியா…
ஹைலைட்ஸ்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் அளிக்கிறது. ரூ.6 லட்சமாக இருந்த இழப்பீடு தொகை, கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியிலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர் குறைந்தது ஒரு வருடமாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கவேண்டும். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. தனியார் நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலைப்பார்ப்பவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருந்தால், இவர்களுடைய குடும்பத்துக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடு வழங்குகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் PF கணக்கு வைத்திருந்தால் மட்டுமே,…
ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்களுக்கு டாடா நுகர்வோர் சேவை (TCS) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து Off Campus Drive நடத்தப்பட உள்ளது. கல்வித் தகுதி: BCA / B.Sc / B.Voc வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும் தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.05.2021 மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த pdf லிங்கை கிளிக் செய்யவும். https://www.tcs.com/careers/smart-hiring-IT-drive
ஹைலைட்ஸ்: கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பையில் 13 ரேஷன் பொருட்கள் அடங்கி உள்ளது. தொகுப்பு பையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படமோ, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படமோ இடம் பெறவில்லை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜீன் 3-ஆம் தேதி இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த தீவிரத்தின் காரணமாக இந்தியாவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்தியாவில் தினமும் 3000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பால் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் குறிப்பிட்டக்காலத்திற்கான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 10-ம் தேதிலிருந்து முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இந்த கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பையில் 13…
ஹைலைட்ஸ்: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வருகிறார்கள். கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வருகிறார்கள். முதலமைச்சர் வேண்டுகோளின் பேரில் திரைப்பிரபலங்களும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண…
Kancheepuram District Court அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant and Copyist Attender & Others காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எட்டாம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு காஞ்சிபுரம் பணியிடமாக கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Kancheepuram District Court வேலையின் பெயர் : Office Assistant and Copyist Attender & Others கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு வேலையிடம் : Kancheepuram தேர்வு முறை : Interview மொத்த காலிப்பணியிடம் : 103 மாத சம்பளம் : Rs. 15,700 to 50,000 விண்ணப்பிக்க கடைசி நாள் : 06/06/2021 இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.…
ஹைலைட்ஸ்: முருங்கை மரத்தின் கீரை, பூ , காய், வேர், பட்டை ஆகிய அனைத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது. முருங்கை கீரையில் பாலைவிட நன்கு மடங்கு கால்சியம் உள்ளது. நம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க, முருங்கை கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும். முருங்கை கீரையில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கை மரத்தின் கீரை, பூ , காய், வேர், பட்டை ஆகிய அனைத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது. நம் உடலில் இரத்தணுக்களின் அளவு குறைவாக இருந்தால், முருங்கைக்கீரையை சாப்பிட்டு இயற்கையான முறையில் இதனை அதிகரிக்கலாம். மேலும் முருங்கை கீரை உண்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை பார்ப்போம். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை உருவாக்கும். பெண்களுக்கு பிரசவத்தின் போது இரத்தம் அதிகம் வெளியேறும். அதனால் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட…
ஹைலைட்ஸ்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை, விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. கொரோனா இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்தும் வகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை தடுக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் அனுமதி வழங்கியது. இந்த ஆலையில் ஆக்சிஜன் தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காணிப்பு குழுவினர் ஆலையை ஆய்வு செய்து, பிறகு ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். தொடர்ந்து இரவு, பகலாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலையத்தில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த…
ஹைலைட்ஸ்: சென்னை, கோவை, மதுரை உட்பட 14 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சுகாதார துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை காக்க, கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் திறக்கப்பட்ட உள்ளது. இந்த ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்தும் வகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழக்கிறார்கள். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க தமிழக அரசு, கூடுதல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்க…
ஹைலைட்ஸ்: தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். எந்த வகையிலும், என் பதவியையோ, என் பெயரோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது. நான் தலைமை செயலாளர் பதவியில் இருக்கும் வரை என் நூல்களை வாங்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பள்ளிக் கல்வித்துறைக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் பணி நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களை வைத்தும் சில நூல்களை எழுதி உள்ளேன். இவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக நான் பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம்…
